விமான நிலையத்திலும் மாற்றம்

விமான நிலையத்திலும் மாற்றம்

1 mins read
69f16d09-c581-447c-bd87-33c2bb154c42
-

சிங்­கப்­பூ­ரில் விமான சிப்­பந்­தி­கள் இங்­கும் வெளி­நா­டு­க­ளி­லும் வழக்­க மான நட­வ­டிக்­கை­க­ளைத் தொடங்க முடி­யும். கொவிட்-19 பணிக்­குழு கூட்­டத்­தில் பேசிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன், விமா­ன­நி­லைய ஊழி­யர்­கள் முகக்க­வ­சம் அணிந்தால் போதும் என்றார்.

அதிக தொற்று ஆபத்­துள்ள சூழ­லில் வேலை பார்க்­கும் ஊழி­யர்­கள் கையு­றை­க­ளை­யும், முகமூடி யையும் அணிந்­து­கொள்ள வேண்டும். அவர்­கள் காலக்­கி­ரம முறைப்­ப­டி­யான கொவிட்-19 பரி­சோ­த­னை­க்கு உட்­பட வேண்­டாம்.

விமா­ன­நி­லை­யத்­தில் இனி­மேல் தனித்­தனி தடுப்­பு­கள் இருக்­காது. ஆகை­யால் விமா­னப் பய­ணி­கள் இடை­வ­ழிப் பய­ணி­கள் கூடத்­தில் தாரா­ள­மாக நட­மா­ட­லாம்.

சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­களில் கொவிட்-19 நோயாளிக்கு அளிக்­கப்­படும் சிகிச்­சைக்­காக செலுத்தவேண்­டிய தொகை தொடர்­பான கொள்கை மாற்­றங்­களை­யும் அமைச்சு அறி­வித்­தது.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால அனு­மதி­தா­ரர்­கள் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் சமூக சிகிச்சை நிலை­யங்­களி­லும் கொவிட்-19 சிகிச்­சைக்கு கட்­ட­ணம் செலுத்த வேண்­டாம்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் சிகிச்­சைக்­கான செலவை ஏற்­க­வேண்டி இருக்­கும்.