சிங்கப்பூரில் 80 வயது, அதற்கும் அதிக வயதுள்ளவர்கள், நோய் தடுப்பாற்றல் இல்லாதவர்கள், முற்றிய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு கொவிட்-19 கிருமி தொற்றாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இப்போது தகுதி பெறுவார்கள்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று நடந்த கொவிட்-19 பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
கடுமையான தொற்று நோய்களுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு, காலவோட்டத்தில் மங்கிவிடுகிறது என்பது அனைத்துலக நிலவரங்கள் மூலம் தெரியவருகிறது.
ஆகையால் இந்தப் பிரிவினருக்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.

