மின்னிலக்கமயமாக முயற்சி எடுத்த 300,000 மூத்த குடிமக்களுக்கு விருது

மின்னிலக்கமயமாக முயற்சி எடுத்த 300,000 மூத்த குடிமக்களுக்கு விருது

2 mins read
2a8d18b4-791f-41d3-a097-42056f2c4728
-

கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பரவல் 2020ஆம் ஆண்டு சிங்­கப்­பூரைப் பாதித்­த­போது திரு­வாட்டி மஹ்­ஜ­பீன் ஷபிர் பாஸ்­ராய் ஏமாற்­ற­மடைந்­தார். இவர் ஈடு­பட்டு வந்த தொண்­டூ­ழிய நட­வ­டிக்­கை­கள் பாதிக்­கப்­பட்­டது அதற்­குக் கார­ணம்.

'ஆர்எஸ்விபி சிங்கப்பூர்' எனும் தொண்டூழிய அமைப்பில் இவர் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றி வந்தார். கொவிட்-19 சூழலால் மெய்நிகராகப் பாடங்களை நடத்த 'ஸூம்' செயலியைத் தானாகவே கற்றுக்கொள்ளவேண்டிய நிலை இவருக்கு உருவானது.

"முதல்­மு­றை­யாக மெய்­நி­க­ரா­கப் பாடத்தை நடத்­தி­ய­போது எனது இரு பேரப்பிள்­ளை­களும் என்­னுடன் உட்­கார்ந்து எனக்­குக் கற்­றுத் தந்­த­னர். எனக்­குக் கற்­றுத் தரு­வ­தில் அவர்­கள் மிக­வும் மகிழ்ச்சி­ய­டைந்­த­னர். பாடம் நடத்­தும்­போது நான் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யபோது அவர்­கள் உதவி­னர்," என்று திரு­வாட்டி பாஸ்­ராய் கூறி­னார்.

கொள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­தில் மின்­னி­லக்­க­ம­ய­மா­கும் முயற்சி­களை மேற்கொண்டதற்காக விருது வழங்கி கௌர­விக்­கும் 300,000 மூத்­தோ­ரில் இவ­ரும் ஒரு­வர்.

'சி3ஏ' எனப்­படும் 'கெளன்­சில் ஃபோர் தெர்ட் ஏஜ்' மூத்தோர் ஆதரவு மன்றம் இவர்­க­ளைக் கௌர­விக்க நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தது. இந்­நி­கழ்ச்­சி­யில் தங்­க­ளின் நட­வடிக்­கை­களை இணை­யம்­வழி மேற்­கொள்­ளும் முயற்­சி­களை மேற்கொண்ட 86 பங்­காளி அமைப்­பு­களும் கௌர­விக்­கப்­பட்­டன. 'சி3ஏ', ஆரோக்­கி­ய­மாக முது­மை­ய­டை­வதை ஊக்­கு­விக்­கும் அமைப்பு. அதன்­கீழ் 'நேஷ­னல் சில்­வர் அ­கா­டமி' எனும் மூத்­தோர் வாழ்­நாள் கற்­றல் கழ­கம் இயங்­கு­கிறது. அந்­தக் கழ­கம் இணை­யம்­வழி நடத்­தும் பாடங்­க­ளுக்கு விண்­ணப்­பித்­தோ­ரின் எண்­ணிக்கை சென்ற ஆண்டு 30 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

நிகழ்ச்­சி­யில் சுகா­தார அமைச்­சின் நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மஹ்­ஸாம் மெய்­நி­க­ராகக் கலந்­து­கொண்டு பேசி­னார்.

"கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் சூழலில் மின்னிலக்கத் திட்டங்களை அதிகமான மூத்தோர் வரவேற்றிருப்பதில் மனநிறைவு அடைகிறேன்," என்று அவர் சொன்னார்.

நிலை­மைக்கு ஏற்­ற­வாறு தன்னை மாற்­றிக்­கொள்ள முத­லில் சிர­மப்­பட்­ட­தா­க­வும் இப்­போது இணை­யம்­வழி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது எளி­மை­யாக இருப்­ப­தா­க­வும் திரு­வாட்டி பாஸ்­ராய் கூறி­னார்.