'உயிர்வாயு பற்றாக்குறையால் கப்பல் ஊழியர்கள் மாண்டனர்'

'உயிர்வாயு பற்றாக்குறையால் கப்பல் ஊழியர்கள் மாண்டனர்'

1 mins read
25be499d-b858-49e8-94c7-95d2c9949e60
-

போது­மான உயிர்­வாயு இல்­லா­த­தால் கப்­பல் ஒன்­றின் தொட்­டிக்­குள் சென்ற இரண்டு ஊழி­யர்­கள் மாண்­ட­தாக மனி­த­வள அமைச்­சின் விசா­ரணை அதி­காரி நீதி­மன்­றத்­தில் கூறி­யுள்­ளார்.

பங்­ளா­தே­ஷைச் சேர்ந்த திரு ஃபோர்ண­ஹட், திரு கோலில் இப்­ரா­ஹிம் ஆகிய இரு­வ­ரும் 'கேஎஸ்இ மரீன் வொர்க்ஸ்' நிறு­வ­னத்­திற்கு வேலை செய்­த­னர். அவர்­கள் உயி­ரைப் பலி­வாங்­கிய சம்­ப­வம் சென்ற ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி­யன்று நிகழ்ந்­தது.

அவ்­வி­ரு­வ­ரும் நுழைந்த தொட்டி­யில் உயர்­வா­யு­வின் அளவு 18.5 விழுக்­காடு இருந்­த­தாக குடி­மைத் தற்­காப்­புப் படை­ தெரி­வித்­தி­ருந்தது. மனி­தர்­கள் இயங்க குறைந்­தது 19.5 விழுக்­காடு உயிர்­வாயு தேவை என்று காவல்­துறை விசா­ரணை அதி­காரி ருசாய்னி கூறி­னார்.