சென்ற ஆண்டு மார்ச் மாதம் சளிக்காய்ச்சலுக்கான மருத்துவ விடுப்பை நிராகரித்து வெளியே சென்ற, சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்த ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த ஆடவர் வேலைக்குச் சென்றதுடன் உணவங்காடி நிலையங்கள், கடைத்தொகுதி ஆகிய இடங்களுக்கும் சென்றிருந்தார்.
35 வயது ஸேக் லியாவ் சீ சியாங்கிற்கு ஏழு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் சட்டத்தின்கீழ் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
தான் புதிதாக வேலையில் சேர்ந்ததாகவும், அதனால் மருத்துவ விடுப்பில் போகமுடியாது என்றும் லியாவ் மருத்துவரிடம் கூறியிருந்தார்.

