தலைகீழாகக் கவிழ்ந்த டாக்சி

தலைகீழாகக் கவிழ்ந்த டாக்சி

1 mins read
39324c74-f39b-44bb-9f4c-374db86b7532
விபத்து கிளமெண்டியில் நிகழ்ந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கிள­மெண்­டி­யில் நிகழ்ந்த விபத்­தில் டாக்சி ஒன்று தலை­கீ­ழா­கக் கவிழ்ந்­தது. அதன் ஓட்­டு­நர் இங் டெங் ஃபோங் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

கிள­மெண்டி அவென்யு மூன்­றில் நேற்று காலை சுமார் 11 மணிக்கு சில­ருக்கு பலத்த சத்­தம் கேட்­டி­ருக்­கிறது. சத்தத்தைத் தொடர்ந்து அருகே ஒரு டாக்சி தலை­கீ­ழா­கக் கிடப்­பதை அவர்கள் கண்டனர்.

டாக்­சி­யி­லி­ருந்து புகை வெளி­வந்­த­தாக சிலர் தெரி­வித்­த­னர். அது வெடித்­து­வி­டுமோ என்ற அச்­சமும் சில­ரி­டையே இருந்­தது.

டாக்­சி­யின் ஓட்­டு­நர் அதி­லி­ருந்து வெளியே வர முயன்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. டாக்­சிக்கு முன்­னால் இருந்த வெள்ளை நிற வாக­னத்தின் ஓட்டுநர் அவ­ருக்கு உதவ முயன்­ற­தாக சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­கள் கூறி­னர்.

நேற்று காலை சுமார் 11.30 மணிக்­குக் குடி­மைத் தற்­காப்­புப் படைக்குத் தக­வல் வந்­தது. சம்பவம் குறித்து விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.