கிளார்க் கீ பகுதியில் ஆடவர் ஒருவர் சில நொடிகளில் எதிர்பாரா விதமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
மெர்ச்சென்ட் சாலையில் உள்ள ஓர் உணவகத்தில் திரு சுவா என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் நிதி ஆலோசகர் தனது நண்பர்களுடன் உணவருந்திக்கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் தனியாக அருகில் இருந்த கடைக்குச் சென்றிருக்கிறார்.
அந்த வேளையில் ஒருவர் கூர்மையான பொருளால் அவரின் தலையில் தாக்கினார். அதற்குப் பிறகு திரு சுவா தனது நண்பர்களை நோக்கி மெதுவாக நடந்து சென்றிருக்கிறார்.
அவரின் நண்பர்கள் மருத்துவ உதவி வாகனச் சேவைக்கு அழைத்தனர்.
திரு சுவாவின் தலையில் ஏற்பட்ட வெட்டுக் காயங்கள் சுமார் 10 சென்டிமீட்டர் நீளம் இருந்தன. இச்சம்பவம் குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

