அதிக நேரம் காத்திருந்ததால் சிசுவை இழந்ததாகச் சொல்லும் பெண்

அதிக நேரம் காத்திருந்ததால் சிசுவை இழந்ததாகச் சொல்லும் பெண்

1 mins read
8de18240-0408-4147-9819-ba6835ff179e
-

வயிற்றுவலி கார­ண­மாக கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யில் நான்கு மணி­நே­ரத்­திற்­குக் காத்திருந்த பிறகு வயிற்றில் இருந்த சிசுவை இழந்­த­தாக ஒரு கர்ப்பிணி கூறி வரு­கி­றார். இது குறித்து அந்த மருத்­து­வ­மனை விசா­ரணை நடத்தி வரு­கிறது.

அந்­தப் பெண் இணை­யத்­த­ளத்­தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். நோயா­ளி­கள் சொல்­வ­தைத் தாங்­கள் முழு­மை­யா­கக் கேட்­டுக்­கொள்­வ­தா­க­வும் இதைப் பற்றி விசா­ரித்து வரு­வ­தா­க­வும் கேகே மருத்­து­வ­மனை கூறி­யது.

மற்­றொரு சம்­ப­வத்­தில் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் இரண்டு மணி­நே­ரம் காத்திருந்த பிறகு தனது வயிற்­றில் இருந்த சிசுவை இழந்த பெண்­ணிடம் தேசிய பல்­கலைக்­கழக மருத்­து­வ­மனை மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்­டது.

ரத்­தம் வெளி­யே­றிக்­கொண்­டி­ருந்த நிலையில் அந்தப் பெண் தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் காத்­துக்­கொண்­டி­ருந்­தார். இச்­சம்­ப­வம் நேர்ந்­த­போது அவர் 36 வாரங்­கள் கர்ப்­ப­மாக இருந்­தார்.

அந்­தப் பெண்ணை மேலும் அக்­க­றை­யு­டன் கவ­னித்­தி­ருக்­க­வேண்­டும் என்­றும் அவ­ருக்கு சரி­யான பரா­ம­ரிப்பை வழங்­கி­யி­ருக்­க­வேண்­டும் என்­றும் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் தலைமை நிர்­வாகி எமெ­ரிக் லிம் அறிக்கை ஒன்­றின் மூலம் கூறி­னார். இத்­த­கைய சம்­ப­வங்­கள் இனி நிக­ழா­மல் இருக்க அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­படும் கர்ப்­பி­ணி­க­ளைக் கவ­னிப்­பதற்­கான வழி­மு­றை­களை மருத்­து­வ­மனை மறு­ப­ரி­சீ­லனை செய்­வதா­க­வும் அவர் தெரி­வித்­தார்.