சிங்கப்பூரில் சென்றாண்டு கொவிட்-10 சூழ்நிலையில் அதிகமானோர் உயிரிழந்தனர்

சிங்கப்பூரில் சென்றாண்டு கொவிட்-10 சூழ்நிலையில் அதிகமானோர் உயிரிழந்தனர்

1 mins read
097ff4f2-e3bf-43c0-ab80-56f0bdd9e3f0
(படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்) -

சிங்கப்பூரில் சென்றாண்டு அதிகாமானோர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிருமித் தொற்று இதற்கு ஒரு காரணம் எனக் கூறப்பட்டது.

கொவிட்-19 கிருமித் தொற்று பாதிப்புக்கு உலகெங்கும் மில்லியன் கணக்கான மக்கள் பலியாகினர்.

சென்றாண்டு சிங்கப்பூரில் மரண விகிதம் 100,000 பேருக்கு 582ஆக இருக்கிறது. ஒப்புநோக்க 2020ஆம் ஆண்டில் விகிதம் 518ஆகவும், அதற்கு முந்தைய ஆண்டு விகிதம் 504ஆக இருந்தது.

கிருமித் தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்யவேண்டியதாக அமைச்சு சொல்லியது. ஓமிக்ரான் அலை அடங்கியவிடும், அது குறித்த தகவல்களை அமைச்சு பகிர்ந்துகொள்ளும்.

அனைத்துலக ரீதியில் ஒப்பிடும்போது, சிங்கப்பூரில் தொற்று பாதிப்பால் ஏற்பட்ட மரணங்கள் மிகக் குறைவு என்று அமைச்சு சுட்டிக்காட்டியது.