சிங்கப்பூரில் அன்றாட தொற்று எண்ணிக்கை குறைந்துவருகிறது

சிங்கப்பூரில் அன்றாட தொற்று எண்ணிக்கை குறைந்துவருகிறது

1 mins read
2432308e-998f-48d5-a325-f60cd1d73503
படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சிங்கப்பூரில் புதிதாக 8,478 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. புதன்கிழமை நிலவரப்படி இந்த எண்ணிக்கை 8,940ஆக இருந்தது.

தொற்றுப் பாதிப்பால் 873 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 24 பேர் உள்ளனர். 114 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்குக் கீழ் உள்ளது.

கொவிட்-19க்கு மேலும் ஆறு பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 174 பேருக்கு தொற்று உறுதியானது.

வாராந்திர கொவிட்-19 தொற்று விகிதம் தொடர்ந்து 23வது நாளாக 1க்குக்கீழ் உள்ளது. அது 0.79ஆக இருந்தது.

மார்ச் 24ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 1,053,139 தொற்றுச் சம்பவங்களும், 1,226 தொற்றுப் பாதிப்பால் மரணங்களும் பதிவாகியுள்ளன.