போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 100 சந்தேக நபர்கள் கைது; $382,000 மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 100 சந்தேக நபர்கள் கைது; $382,000 மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

1 mins read
b95ca37d-be53-42a5-8073-7472626e02ae
படங்கள்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு -
multi-img1 of 2

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் 100 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து $382,000 மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

மார்ச் 14 முதல் 23 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மொத்தம் 6,308 கிராம் கஞ்சா, 279 கிராம் ஹெராயின், 404 கிராம் ஐஸ், 237 கிராம் கேட்டமின், 709 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள், 197 எரிமின்-5 மாத்திரைகள் ஆகியவற்றோடு மற்ற பல போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

சுவா சூ காங், செங்காங், மெக்பர்சன், தம்பனீஸ் ஆகிய வட்டாரங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஆக இளையவர் 16 வயதான நபர் என்று தெரிவிக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்களை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.