சிங்கப்பூரின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தங்கள் ஆகியவற்றை உள்ளூர் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அவற்றுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
மரினா பே சேண்ட்ஸ் ஒருங்
கிணைக்கப்பட்ட உல்லாசத் தலத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஏபெக்ஸ் வர்த்தக உச்சநிலை மாநாட்டில் பேசிய திரு ஈஸ்வரன், உலகளாவிய பொருளியல், பெருமளவிலான சவால்களைத் தொடர்ந்து எதிர்நோக்குவதாகக் கூறியனா்.
புவிசார்ந்த அரசியல் அழுத்தங்கள், பணவீக்கப் பிரச்சினைகள், விநியோக இடையூறு, உலகமய
மாதல் எதிர்ப்பு, உக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு ஆகியவை உலகளாவிய பொருளியலைப் பாதிப்பதாக திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.
இருப்பினும், நிலையற்ற சூழல் மூலமாகவும் வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் என்றார் அவர்.
உதாரணத்துக்கு, கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக மின்னிலக்கமயமாதல் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.
கொவிட்-19 சூழலுக்கு முன்பு மின்னிலக்கத் திறனில் ஆர்வம் காட்டாத நிறுவனங்கள் தற்போது அதைக் கடைப்பிடிப்பதாக அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்னிலக்கத் திட்டம் வாயிலாக 80,000க்கும் அதிகமான நிறுவனங்கள் மின்னிலக்கத் தீர்வுகளைக் கடைப்பிடித்து வருவதாக அவர் கூறினார்.
"இந்தச் சவால்களை எதிர்கொண்டு, புதிய வாய்ப்புகளை நாம் பயன்படுத்தி வரும் நிலையில், சிங்கப்பூர் பொருளியல் மேலோங்க வர்த்தகம் தொடர்ந்து முக்கியமானதாக இருக்கிறது," என்றார் திரு ஈஸ்வரன்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் சிங்கப்பூரின் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதாக அவர் கூறினார்.
இம்மாதத் தொடக்கத்தில் வர்த்தகம் 2030 உத்திமுறையை வர்த்தக, தொழில் அமைச்சு அறிமுகப்படுத்தியது.
சிங்கப்பூரின் ஏற்றுமதியை $805 பில்லியனிலிருந்து $1 டிரில்லியனுக்கு உயர்த்த அது இலக்கு கொண்டுள்ளது.

