கைபேசி, இணையச் செயலியை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும். இதற்காகப் புதிய பயிற்சித் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கிழக்குக் கல்லூரியில் உள்ள புதிய நிலையத்தில் இப்பாடம் கற்றுத்தரப்படும்.
இதுதொடர்பாக அவுட்சிஸ்டம்ஸ் நிறுவனமும் தொழில்நுட்பக் கல்விக் கழகமும் நேற்று புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன. இந்த மூன்று ஆண்டு பங்காளித்துவத் திட்டம் வாயிலான தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் குறைந்த அளவிலான குறியீட்டு முறையுடன் அல்லது குறியீட்டு முறை அறவே இல்லாமல் மென்பொருள் உருவாக்குவது எப்படி என்று சொல்லித் தரப்படும்.
இத்திட்டம் மூலம் ஏறத்தாழ 1,000 மாணவர்கள் பலனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.