10 பேர் வரை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்கு நல்ல வரவேற்பு

10 பேர் வரை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்கு நல்ல வரவேற்பு

1 mins read
e11dd84e-fede-48b4-880d-87f017b31d12
-

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் அடுத்த வார­ம் தளர்த்­தப்­ப­டு­கின்றன. விதி­முறை மாற்­றம் குறித்து மக்­கள் என்ன நினைக்­கி­றார்­கள் என்­பது குறித்து கண்­ட­றிய ஆய்வு நடத்­தப்­பட்­டது.

பய­னீட்­டா­ளர் நுண்­ண­றிவு, பகுப்­பாய்வு நிறு­வ­ன­மான மில்­லியு இன்­சைட் நேற்று முன்­தி­னம் நடத்­திய இந்த ஆய்­வில் 16 வய­தும் அதற்­கும் மேற்­பட்ட 1,010 பேர் பங்­கெ­டுத்­த­னர்.

அவர்­களில் 77 விழுக்­காட்­டி­னர் கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு­களை வர­வேற்­றுள்­ள­னர்.

நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட இருக்­கும் மாற்­றங்­களில் உண­வ­கங்­களில் அதி­க­பட்­சம் பத்து பேர் வரை ஒன்­றாக அமர்ந்து சாப்­பி­டு­வ­தும் அடங்­கும்.

இந்­தக் கட்­டுப்­பாட்­டுத் தளர்­வுக்கு ஆக அதி­க­மான வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

இதற்கு 75 விழுக்­காட்­டி­னர் ஆத­ரவு தெரி­வித்­த­னர்.

வீடு­களில் ஒரே நேரத்­தில் அதி­க­பட்­சம் 10 பேர் ஒன்­று­கூட வழங்­கப்­பட்­டுள்ள அனு­ம­திக்கு 72 விழுக்­காட்­டி­னர் ஆத­ரவு தெரி­வித்­த­னர்,

வெளி­யி­டங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது அவ­ர­வர் விருப்­பம் என்ற அறி­விப்­புக்­குக் கிடைத்­துள்ள ஆத­ரவு குறை­வாக உள்­ளது.

அதற்கு 52 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே ஆத­ரவு தெரி­வித்­த­னர்.

இந்த மாற்­றங்­கள் இம்­மா­தம் 29ஆம் தேதி­யி­லி­ருந்து நடப்­புக்கு வரும்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­று­டன் வாழ்­வது இனி வழக்­க­மா­ன­தா­கி­வி­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டதை அடுத்து கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­கின்­ற­ன.