செய்திக்கொத்து

1,500 பேரை வேலையில் அமர்த்த இருக்கும் ஓசிபிசி வங்கி

அடுத்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1,500 தொழில்நுட்ப ஊழியர்களை ஓசிபிசி வங்கி வேலையில் அமர்த்த இருக்கிறது. மின்னிலக்க உருமாற்றம், வர்த்தக வளர்ச்சி ஆகியவற்றை விரைவுப்படுத்தும் நோக்கில் ஓசிபிசி இந்த நடவடிக்கையை எடுக்கிறது.

செயலி மேம்பாட்டாளர்கள், இணையப் பாதுகாப்பு நிபுணர்கள், தரவு விஞ்ஞானிகள் ஆகியோர் வேலையில் அமர்த்தப்படுவர்.

சீனா, ஹாங்காங், இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் ஓசிபிசி இயங்கி வருகிறது. புதிதாக வேலைக்கு எடுக்கப்படுவோரில் சிலர் இந்த நாடுகளுக்கும் அனுப்பப்படுவர்.

ஆனால் பெரும்பாலானோர் சிங்கப்பூரில் வேலை செய்வர் என்று ஓசிபிசி வங்கியின் தலைமை செயலாக்க அதிகாரி லிம் கியாங் டோங் தெரிவித்தார்.

150 தொழில்நுட்ப ஊழியர்களை வேலைக்கு எடுக்கப்போவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டிபிஎஸ் வங்கி தெரிவித்திருந்தது. அத்துடன் 140 பெண்களையும் பணியில் அமர்த்தப் போவதாகவும் அது கூறியது.

தொழில்நுட்பத் திறன் கொண்ட ஊழியர்களை வேலையில் அமர்த்த நிறுவனங்களிடையிலான போட்டி சூடுபிடிக்கிறது.

மற்ற பிரிவுகளில் உள்ள தனது ஊழியர்கள் தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற ஓசிபிசி ஏற்பாடுகள் செய்துள்ளது. அதனை அடுத்து அவர்கள் வங்கியின் தொழில்நுட்பக் குழுக்களில் சேரலாம் என்று அது கூறியது.

உள்ளூர் ஊழியர்களின் புத்தாக்கத் திறனுக்குக் கிடைத்த அங்கீகாரம்

டைசன் நிறுவனம் சிங்கப்பூரில் விரிவடைதற்கு இளம் உள்ளூர் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரின் புத்தாக்கத் திறனும் ஆர்வமும் காரணம் என்று அந்நிறுவனத்தின் நிறுவனர் சர் ஜேம்ஸ் டைசன் நேற்று தெரிவித்தார்.

"சிங்கப்பூரின் இலட்சிய உணர்வை நன்கு உணர முடிகிறது. உயர்தொழில்நுட்ப, தீவிர ஆய்வு வர்த்தகங்களுக்கு சிங்கப்பூர் உகந்த இடம் என்று நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இது மறுஉறுதி செய்கிறது," என்று திரு டைசன் கூறினார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் டைசன் நிறுவனம் சிங்கப்பூரில் $1.5 பில்லியன் முதலீடு செய்யும் என்றும் திரு டைசன் நேற்று அறிவித்தார். டைசனின் $4.9 பெறுமானமுள்ள உலகளாவிய முதலீட்டுத் திட்டத்தில் இது அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!