உணவு பாதுகாப்பின்மையிலிருந்து விடுபட்ட சில குடும்பங்கள்

உணவு பாதுகாப்பின்மையிலிருந்து விடுபட்ட சில குடும்பங்கள்

2 mins read
253ba27b-1b6e-499d-aac2-632f89afb7bd
போதிய உணவு வாங்க முடியாமல் இருந்த சில குடும்பங்களின் நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு முன்பு போதிய உணவு வாங்க முடி­யா­மல் தவித்த குடும்­பங்­களில் 40 விழுக்­காடு குடும்­பங்­க­ளின் நிலை தற்­போது மேம்­பட்­டுள்­ள­தாக ஆய்வு ஒன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது. ஒரு குடும்­பத்­துக்­குப் போது­மான உணவு இல்­லாத நிலை ஏற்­பட்­டாலோ அல்­லது ஆரோக்­கி­ய­மாக இருக்க போதிய உணவு பெறும் நம்­பிக்கை இல்­லாத நிலை ஏற்­பட்­டாலோ அது உணவு பாது­காப்­பின்­மை­யா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

முன்பு உணவு பாது­காப்­பின்­மை­யால் பாதிக்­கப்­பட்ட குடும்­பத்தை கொவிட்-19 நெருக்­க­டி­நிலை எவ்­வாறு பாதித்­துள்­ளது என்­பதை கண்­ட­றிய சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் லியேன் நிலை­யத்­தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் ஆய்வு நடத்­தி­னர்.

ஓராண்­டில் குறைந்­தது ஒரு முறை­யா­வது உணவு பாது­காப்­பின்­மையை அனு­ப­வித்­தி­ருப்­ப­தாக ஆய்­வில் பங்­கெ­டுத்த ஏறத்­தாழ 1,200 குடும்­பங்­களில் 10.4 விழுக்­காடு குடும்­பங்­கள் தெரி­வித்­த­தாக 2020ஆம் ஆண்­டில் வெளி­யி­டப்­பட்ட பசி அறிக்­கை­யின் முதல் சுற்­றில் தெரி­ய­வந்­தது. குறைந்­தது மாதம் ஒரு­முறை போதிய உணவு இல்­லாத நிலை ஏற்­பட்­ட­தாக ஐந்­தில் இரண்டு குடும்­பங்­கள் தெரி­வித்­தன.

2020ஆம் ஆண்டு பங்­கெ­டுத்த குடும்­பங்­களில் 59 குடும்­பங்­க­ளி­டம் இவ்­வாண்­டும் ஆய்வு நடத்­தப்­பட்­டது. அவற்­றில் 44.1 விழுக்­காடு குடும்­பங்­கள் தங்­கள் நிலைமை மேம்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­வித்­தன. குறைந்­தது மிக மோச­மான உணவு பாது­காப்­பின்மை நிலை­யி­லி­ருந்து மித­மான உண­வுப் பாது­காப்­பின்மை நிலைக்கு உயர்ந்­தி­ருப்­ப­தாக அவை குறிப்­பிட்­டன.

உணவு பாது­காப்­பின்மை பிரச்­சினை தங்­க­ளுக்கு இனி இல்லை என்று இவ்­வாண்டு நடத்­தப்­பட்ட ஆய்­வில் பங்­கெ­டுத்த 59 குடும்­பங்­களில் 12 குடும்­பங்­கள் தெரி­வித்­தன.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக உதவி கேட்டு முன்­வந்த குடும்­பங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­பது இதற்­குக் கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அது­மட்­டு­மல்­லாது, உணவு வழங்­கும் திட்­டங்­களும் கைகொ­டுத்­தி­ருப்­ப­தாக ஆய்வு கூறி­யது.

சில குடும்­பங்­க­ளின் நிலை மேம்­பட்­டுள்­ள­போ­தி­லும் ஆய்­வில் பங்­கெ­டுத்த குடும்­பங்­களில் 45.8 விழுக்­காடு குடும்­பங்­கள், தங்­கள் நிலை­மை­யில் எவ்­வித மாற்­ற­மும் இல்லை என்று தெரி­வித்­தன. நிலைமை மோச­ம­டைந்­தி­ருப்­ப­தாக 10.2 விழுக்­காடு குடும்­பங்­கள் கூறின.