அபாரமாக மீண்டு வந்த உற்பத்தித் துறை

அபாரமாக மீண்டு வந்த உற்பத்தித் துறை

2 mins read
c8cf8741-ab1f-4d1b-9d99-a68064a38c10
-

சிங்­கப்­பூ­ரின் உற்­பத்தி எதிர்­பாரா வித­மாக அபா­ர­மாக மீண்டு வந்­துள்­ளது. கடந்த ஜன­வரி மாதம் உற்­பத்தி வளர்ச்சி மந்­த­மாக இருந்­தது.

மின்னணுவியல் துறையில் 'சிப்ஸ்' எனும் சில்லுகளின் உற்பத்தி வளர்ச்சி கண்டது. ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி சூடுபிடித்ததற்கு இது முக்கியக் காரணம்.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் சென்ற மாதம் உற்­பத்தி 17.6 விழுக்­காடு வளர்ச்­சி­ய­டைந்­தது. கடந்த ஜன­வரி மாதம் இந்த விகி­தம் 2.4 விழுக்­கா­டா­க மட்டுமே இருந்தது.

சென்ற மாதம் உற்­பத்தி 6.3 விழுக்­காடு வளர்ச்­சி­கா­ணும் என்று புளூம்­பர்க் செய்தி நிறு­வ­னம் நடத்­திய கருத்­தாய்­வில் கவ­னிப்­பா­ளர்­கள் கணித்­தி­ருந்­த­னர்.

இறு­தி­யில் பதி­வான வளர்ச்சி விகி­தம் அதை­விட கணி­ச­மாக அதி­கம்.

உற்­பத்­தித் துறை­யில் இது கடந்த எட்டு மாதங்­களில் பார்த்தி­ராத வளர்ச்சி. மேலும், தொடர்ந்து ஐந்­தா­வது மாத­மாக இத்­துறை வளர்ச்­சி­கண்டுள்­ளது.

உயி­ரி­யல் மருத்­துவ உற்­பத்­தித் துறை­யைத் தவிர்த்துப் பார்க்கையில் சென்ற மாதம் உற்­பத்தி 16.8 விழுக்­காடு வளர்ச்­சி­ய­டைந்­தது என்று பொரு­ளி­யல் வளர்ச்சிக் கழகம் வெளி­யிட்ட புள்ளி விவ­ரங்­கள் தெரி­வித்­தன.

மின்­ன­ணு­வி­யல் துறை­யில் ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 32.4 விழுக்­காடு வளர்ச்சி கண்­டது. கடந்த ஜன­வரி மாதம் இந்­தத் துறை­யில் உற்­பத்தி ஒரு விழுக்­காடு மட்­டுமே வளர்ச்­சி­ய­டைந்­தது.

மின்னணுவியல் துறை சிங்கப்பூருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. சென்ற மாதத்தின் மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு இந்தத் துறையைச் சேர்ந்தது.

அதிக மாற்­றங்­கள் ஏற்­ப­டக்­கூடிய உயி­ரி­யல் மருத்­து­வத் துறை­யில் சென்ற மாதம் உற்­பத்தி 25.3 விழுக்­காடு வளர்ச்சிகண்­டது. கடந்த ஜன­வரி மாதம் இந்த விகி­தம் 8.8 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

துல்லியப் பொருளியலின் உற்பத்தி சென்ற மாதம் கணிசமாகக் குறைந்தது. கடந்த ஜன­வரி மாதம் இத்­துறை­யில் உற்­பத்தி 11.2 விழுக்­காடு வளர்ச்­சி­ய­டைந்­தது. சென்ற மாதம் இந்த விகி­தம் ஒன்­றுக்­குக் குறைந்­தது.

போக்குவரத்துத் துறையில் உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் விழுந்தது. இத்துறையில் கடந்த ஜனவரி மாதம் உற்பத்தியின் வளர்ச்சி 14.7 விழுக்காடாக இருந்தது. இந்த விகிதம் சென்ற மாதம் 4.5க்குக் குறைந்தது.

உல­க­ள­வில் எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு வரு­வ­தைத் தொடர்ந்து சென்ற மாதம் விமா­னத் துறை­யில் உற்­பத்தி 11.3 விழுக்­காடு வளர்ச்­சி­கண்­டது.