உட்லண்ட்ஸ் வீவக புளோக்குகளில் உள்ள 32 மின்னிலக்கத் திரைகள் சேதப்படுத்தப்பட்டன

உட்லண்ட்ஸ் வீவக புளோக்குகளில் உள்ள 32 மின்னிலக்கத் திரைகள் சேதப்படுத்தப்பட்டன

1 mins read
5dd3eb2f-e705-4d2b-9abd-0fe68c9c219d
சேதப்படுத்தப்பட்ட திரைகளில் சில. உடைந்த கண்ணாடித் துண்டுகள் தரையில் கிடந்தன. படம்: ஹேனி சோ / ஃபேஸ்புக் -

உட்­லண்ட்­ஸில் உள்ள வீவக புளோக்­கு­க­ளின் அடித்­த­ளங்­களில் இருந்த 32 மின்­னி­லக்­கத் திரை­கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்தத் திரை­கள் உட்­கு­ரோவ் பேட்டையில் உள்ள வீவக புளோக்­கு­களில் அமைந்துள்ளன.

இது குறித்து காவல்­து­றை­யி­டம் புகார் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். மின்­னி­லக்­கத் திரை­க­ளைச் செயல்­ப­டுத்­தும் 'டார்­கெட் மீடியா' நிறு­வ­னம், மார்­சி­லிங்-யூ டீ நகர மன்­றம் ஆகி­ய­வற்­று­டன் அதி­கா­ரி­கள் இணைந்து செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­தப் பகு­திக்­கான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹேனி சோ ஃபேஸ்புக்­கில் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்தார்.

"நமது குடியிருப்பாளர்களுக்குப் பலனளிக்கும் தகவல்களைத் தருவதற்காக அமைக்கப்பட்ட மின்னிலக்கத் திரைகள் இப்படி சேதப்படுத்தப்பட்டது வருத்தம் தரும் ஒன்று.

"அனைவரின் நன்மைக்காகவும் உருவாக்கப்பட்டுள்ள வசதிகளைக் கவனித்துக்கொள்வதில் நாம் எல்லோரும் பங்காற்றுவோம் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளேன்," என்று திருவாட்டி சோ குறிப்பிட்டார்.

இது குறித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் 'டார்­கெட் மீடியா'வையும் காவல்­து­றை­யை­யும் தொடர்­பு­கொண்­டுள்­ளது.