பைனியர் ரோடு நார்த் சாலையில் லாரி விபத்து

பைனியர் ரோடு நார்த் சாலையில் லாரி விபத்து

1 mins read
4f38b749-25ac-414a-9007-def8f64badba
விபத்தில் கவிழ்ந்த மூன்று வாகனங்களில் இந்த லாரியும் ஒன்று. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் மருத்துவ உதவியாளர்களும் லாரியில் சிக்கிய ஓட்டுநரை மீட்டனர். காணொளிப் படம் -

பைனியர் ரோடு நார்த் சாலை­யில் மூன்று வாக­னங்­கள் விபத்­துக்கு உள்­ளா­யின.

இந்த விபத்­தில் பாதிக்­கப்­பட்ட பெரிய லாரி ஒன்று கவிழ்ந்­தது. விபத்­தின் காட்­சி­க­ளைக் கொண்ட காணொ­ளி­களில் மருத்­துவ உத­வி­யா­ளர்­களும் அதி­கா­ரி­களும் லாரி ஓட்­டு­நரை மீட்பது பதி­வா­னது. அந்த ஓட்டுநர் லாரியின் இருக்கையில் சிக்கியிருந்தார்.

மீட்­புப் பணி­களில் உலோக பாகங்­கள் உள்­ளிட்­ட­வற்றை அகற்­று­வ­தற்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் 'ஹைட்­ரா­லிக்' கருவி உப­யோ­கிக்­கப்­பட்­டது.

மீட்கப்பட்ட ஓட்­டு­நர் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். அந்த வேளை­யில் அவ­ருக்கு சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்­துறை­யி­னர் கூறி­னர். லாரியில் இருந்த பொருள்கள் சாலையின் மூன்று தடங்களில் சிதறியதைக் காணொளிகள் காண்பித்தன.

இரண்டு லாரிகளும் ஒரு வாகனமும் சிக்கிய விபத்து குறித்து நேற்று காலை சுமார் 8.35 மணிக்குத் தங்களுக்குத் தகவல் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. இந்த விபத்து பைனியர் சாலைக்கும் ஜூரோங் வெஸ்ட் அவென்யூ ஐந்துக்கும் இடையே உள்ள சாலையில் நிகழ்ந்தது.

இச்­சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.