சட்டவிரோத எரிபொருள் பரிவர்த்தனை: 10 பேர் கைது

சட்டவிரோத எரிபொருள் பரிவர்த்தனை: 10 பேர் கைது

1 mins read
b195bad4-802a-4373-88c8-b12901652896
-

சட்­ட­வி­ரோ­த­மாக மேற்­கொள்­ளப்­பட்ட 'மரீன் கேஸ் ஆயில்ஸ்' எனப்­படும் கடல்­துறை எரி­பொருள் திர­வம் சம்­பந்­தப்­பட்ட பரி­வர்த்­த­னை­யில் ஈடு­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் 10 பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

சந்­தேக நபர்­கள் 32 வய­துக்­கும் 49 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். கடல்­து­றைக் காவல் படை­யும் சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­ய­மும் இணைந்து நடத்­திய கூட்டு நட­வடிக்­கை­யில் அவர்­கள் கைது­செய்­யப்­பட்­ட­னர். மூன்று டன்­கள் எரி­பொருள் திர­வம் சம்­பந்­தப்­பட்ட பரி­வர்த்­த­னை­ செம்­ப­வாங் கப்­பல் பட்­ட­றைக்கு அருகே உள்ள நீர்ப்­பகு­தி­யில் இடம்­பெற்­றது.

கைதான மூவர் சிங்­கப்­பூ­ரில் பதி­வு­செய்­யப்­பட்ட பட­கின் ஊழி­யர்­கள். இதர ஏழு பேர் வெளி­நாட்­டுப் படகு ஒன்­றின் ஊழி­யர்­கள்.