இணையத்தில் பாதிப் பேருக்கு பாதகமான அனுபவம்:ஆய்வு பயமுறுத்துவது, சட்டாம்பிள்ளைத்தனம் போன்றவற்றை சந்தித்தாலும் புகார் இல்லை

இணையத்தில் பாதிப் பேருக்கு பாதகமான அனுபவம்:ஆய்வு பயமுறுத்துவது, சட்டாம்பிள்ளைத்தனம் போன்றவற்றை சந்தித்தாலும் புகார் இல்லை

2 mins read
9f4aab91-9c40-48e7-93b6-d6fabe84892b
-

சிங்­கப்­பூ­ரில் கிட்­டத்­தட்ட பாதிப்­பேர் இணை­யத்­தில் பாதக அனு­ப­வங்­களைப் பெற்­றி­ருப்­ப­தா­கத் தெரி­ய­வரு­கிறது. 1,000 பேரை உள்­ள­டக்கி நடத்­தப்­பட்ட ஆய்­வில் கிட்­டத்­தட்ட பாதிப்­பேர் இவ்­வாறு கூறு­கி­றார்­கள்.

பல துறை­களை உள்­ள­டக்­கிய 'எஎ­ஃப்ஏ' என்ற அமைப்பு இணைய ஆபத்­து­களைக் கையா­ளு­கிறது.

அந்த அமைப்பு இணை­யம் மூலம் 15 முதல் 35 வரை வய­துள்­ள­ வர்­களை உள்­ள­டக்கி ஆய்வு ஒன்றை நடத்­தி­யது.

பயமுறுத்துவது, சட்டாம்பிள்ளைத் தனம், தவ­றான அடை­யா­ளத்­தைக் கூறி நண்­பர்­க­ளாக ஆக முயன்றது போன்ற பாத­க­மான அனு­ப­வங்­கள் தங்­க­ளுக்குக் கிடைத்­த­தாக பாதிப்­பேர் தெரி­வித்­த­னர்.

இருந்­தா­லும் இவர்­களில் சுமார் 43 விழுக்­காட்­டி­னர் பலன் இருக்­காது என்­ப­தால் அவை பற்றி புகார் தெரி­விக்க வேண்­டாம் என்று இருந்து­விட்­டார்­கள்.

ஆய்வு முடி­வு­களை கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் மூத்த ஆய்­வா­ளர் சியூ ஹான் யி வெள்­ளிக்­கி­ழமை இரவு அறிவித்­தார்.

அத்­த­கைய சம்­ப­வங்­கள் பற்றி புகார் தெரி­விக்­கா­மல் இருப்­ப­தால் மேலும் பாத­கச் செயல்­கள் கூடி­வி­டும் என்று இளை­யர்­கள் அனு­பவிக்­கும் இணை­ய பாத­கங்­கள் பற்­றிய இணையக் கருத்­த­ரங்கு ஒன்­றில் பேசி­ய­வர்­கள் கூறி­னர்.

கல்­வித் துறை, மாண­வர்­கள், சட்­டத் துறை, தொழில்­நுட்­பத் துறை ஆகி­ய­வற்­றைச் சேர்ந்­த­வர்­கள் இணை­யத்­தில் பல­வற்­றை­யும் விவா­தித்­தார்­கள்.

இணை­யத்­தில் குறிப்­பாக இன்ஸ்­ட­கி­ராம் போன்ற மிக­வும் பிர­ப­ல­மான தளங்­களில் இத்­த­கைய பாத­கச் சம்­ப­வங்­களை எதிர்­நோக்கு­வோ­ருக்கு ஆத­ரவு அளிப்­ப­தில் பொது­மக்­கள் முக்­கிய பங்­காற்­று­கி­றார்­கள் என்று சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப வடி­வ­மைப்பு பல்­க­லைக்­க­ழக தொடர்பு தொழில்­நுட்­பத்துறை பேரா­சி­ரி­யர் லிம் சுன் சுன் கூறி­னார்.

ஆய்­வில் கலந்­து­கொண்­டோ­ரில் சுமார் 57 விழுக்­காட்­டி­ன­ருக்கு எங்­கி­ருந்து, எப்­படி உதவி நாடு­வது என்­பது தெரி­ய­வில்லை. அல்­லது போதிய அள­வுக்­கு அவர்களுக்குப் புரி­ய­வில்லை.

இந்த நில­வ­ர­மும் கவலை அளிப்­ப­தாக கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் மூத்த ஆய்­வா­ளர் சியூ தெரிவித்தார்.