பராமரிப்பாளர்களின் தொண்டுகளுக்குச் சமூகம் மேலும் சிறப்பாக மதிப்பளிக்க வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்தார். முழு நேர பராமரிப் புப் பணி சிரமமானது. அதனால் உடல், மன நலன் பாதிப்பு சாத்தியம் என்றும் அவர் கூறினார்.
ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக மாதர் தினத்தை யொட்டி சிங்கப்பூர் மாதர் அமைப்புகள் மன்றத்தின் நிதித் திரட்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்து அதிபர் பேசினார்.
"மக்களிள் ஆயுள் கூடுகிறது, சுகாதாரப் பராமரிப்புத் தரங்கள் மேம்படுகின்றன. அதனால் அத்தகைய ஊழியர்களின் சுமை கூடும்," என்று அதிபர் கூறினார்.

