கட்டுப்பாடுகள் தளர்வு: உணவு, பான நிலையங்கள் ஆதரவு

கட்டுப்பாடுகள் தளர்வு: உணவு, பான நிலையங்கள் ஆதரவு

1 mins read
a3aa12cc-65e9-4878-8e97-9f87eac1f487
-

உணவு, பான நிலை­யங்­களில் வரும் செவ்­வாய்க்­கி­ழமை முதல் கட்­டுப்பாடு­கள் தளர்­கின்­றன. இதை அந்­தத் தொழில் நடத்­து­வோர் வர­வேற்று இருக்­கி­றார்­கள்.

விதி­கள் தளர்­வதை அடுத்து உண­வங்­கா­டி­கள், காப்­பிக்­கடைகள், உண­வ­கங்­கள் போன்ற நிலை­யங்­களில் உள்ள சுற்று அடைப்­பு­கள் அகற்­றப்­படும்.

அவற்றில் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்கொண்ட ஐந்து பேர் சேர்ந்­து­ சாப்­பிட அனு­ம­தி உண்டு.

அந்த இடங்­களில் தடுப்­பூசி அடிப்­ப­டை­யில் வாடிக்­கை­யா­ளர்­களை வேறு­ப­டுத்­தும் பாது­காப்பு நடை­மு­றையை அம­லாக்க வேண்டிய தேவை இராது.

உள்ளே வரு­வோ­ருக்கு வில்லை­யை­யும் கொடுக்க ேவண்­டி­ய­தில்லை.

இத­னி­டையே, இதுபற்றி சனிக்­கி­ழமை ஃபேஸ்புக்­கில் கூறி­ய, நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், உண­வங்­காடி கடைக்­கா­ரர்­கள் சங்­கம், காப்­பிக் கடைக்­கா­ரர்­கள் சங்­கம், காப்­பிக்­கடைக் காரர்கள் ஆகியோரைத் தான் சந்­தித்­த­தா­க­வும் அவர்­கள் கட்­டுப்­பா­டு­கள் அகல்­வதற்கு ஆத­ரவு தெரி­வித்­த­தா­க­வும் கூறினார்.