இனவாதக் கருத்து: நவீன பாணி உடை நிறுவனர் மன்னிப்பு

இனவாதக் கருத்து: நவீன பாணி உடை நிறுவனர் மன்னிப்பு

1 mins read
3495ae6d-9e15-4917-b348-502915e8aa0d
-

'ஓங் சண்­மு­கம்' என்ற நவ­நா­க­ரீக ஆடை நிறு­வ­னத்தை நிறுவிய திரு­வாட்டி பிரி­சில்லா சண்­மு­கம் சென்ற ஆண்டு ஆசிய கலா­சார அருங்­காட்­சி­யகம் நடத்திய விரிவுரை நிகழ்ச்சியில் தான் தெரி­வித்த இனம் தொடர்­பான கருத்­து­க­ளுக்­காக இப்போது மன்னிப்புக் கேட்டுக்­கொண்டு இருக்­கி­றார்.

அந்த விரி­வுரை 2021 செப்­டம்­பரில் நிகழ்ந்­தது என்­றா­லும் அண்­மை­யில் அவரின் கருத்­து­ இணை­யத்­தில் பர­பரப்பா­னது.

மாதர்­ அணி­யும் பாரம்­ப­ரிய சீன உடை பற்­றிய கேள்­விக்கு அளித்த பதி­லில் மலாய், இந்­திய மாதர்­க­ளு­டன் ஒப்­பி­டுகை­யில் சீன மாதர்­கள் கணி­ச­மான அள­வுக்கு வேக­மாக ஒரு படி மேலாக எப்படி மேம்­பட்டு இருக்­கி­றார்­கள் என்பது பற்றி அவர் பதி­ல­ளித்­து இருந்தார்.