300 இல்லப் பணியாளர்களுக்கு முதியோர் பராமரிப்பு சான்றிதழ்

300 இல்லப் பணியாளர்களுக்கு முதியோர் பராமரிப்பு சான்றிதழ்

1 mins read
10a79dca-d652-4bc6-b27e-d642300c27bb
சான்றிதழ் பெற்ற இரண்டு வெளிநாட்டு பணியாளர்கள் (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

வீட்டில் முதியர்வகளைப் பராமரிக்கும் பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த 300 இல்லப் பணியாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை சமூக ஆதரவு, பயிற்சிக்கான வெளிநாட்டுப் பணியாளர்கள் சங்கம் நடத்திவருகிறது.

2015ஆம் ஆண்டிலிருந்து இந்தச் சங்கம் முதியவர்களைக் பராமரித்துகொள்ளும் பயிற்சிகளை இல்லப் பணியாளர்களுக்கு நடத்திவருகிறது.

இதுவரை 2,000 மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தை முடித்துள்ளனர்.

மூன்று நாள்கள் பயிற்சிக்குப் பிறகு அடிப்படை சான்றிதழ் வழங்கப்படும்.

முதியவர்கள் இருக்கும் குடும்பங்களில் பயிற்சிபெற்ற பணியாள் இருப்பது அந்தக் குடும்பத்துக்குப் பேருதவியாக இருக்கும் எனச் சங்கம் குறிப்பிட்டது.

பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு $1000 வரை சம்பளம் தர முதலாளிகள் தயாராக இருப்பதாக பணியாள் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தெரிவித்தன.

2025ஆம் ஆண்டுக்குள் 10,000 பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க சங்கம் திட்டமிட்டுள்ளது.