$31 மி. மோசடி, 1,200 வழக்கு, 35 பேர் கைது

$31 மி. மோசடி, 1,200 வழக்கு, 35 பேர் கைது

2 mins read
37b318c1-b840-405d-8e80-ef2e708da4f5
-

சிங்­கப்­பூர் காவல்­துறை, மோச­டி­களில் ஈடு­ப­டு­வோ­ரைப் பிடிப்­ப­தற்­காக விரித்த வலை­யில் 35 பேர் சிக்­கி­யுள்­ள­னர். இவர்­களில் ஆறு பேர் பெண்­கள்.

முத­லீடு, வேலை வாய்ப்பு மோசடி ­க­ளுக்கு எதி­ராக தீவு முழு­வ­தும் நான்கு நாள் மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னை­யில் 16 முதல் 66 வயது வரை­யி­லான 35 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக நேற்றைய அறிக்­கை­யில் காவல்­துறை கூறி­யது.

31 மில்­லி­யன் வெள்­ளிக்­கும் மேற்­பட்ட மோச­டி­களில் சுமார் 1,200 வழக்­கு­க­ளு­டன் தொடர்பு உடைய 255 சந்­தேக நபர்­களில் இவர்­களும் அடங்­கு­வர்.

ஓசி­பிசி, டிபி­எஸ், ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட், யுஓபி, எச்­எஸ்­பிசி ஆகிய உள்­ளூர் வங்­கி­க­ளு­டன் சேர்ந்து செவ்­வாய் முதல் வெள்ளி வரை சோதனை நடத்­தப்­பட்­டது. இதில் 150க்கும் மேற்­பட்ட மோசடி சம்­ப­வங்­கள் இடை­ம­றிக்­கப்­பட்­ட­தா­க­வும் சொல்­லப்­பட்­டது. பாதிக்­கப்­பட்ட வங்கி வாடிக்­கை­யா­ளர்­க­ளின் வங்கிக் கணக்­கு­கள் மூலம் மோசடிக்கா­ரர்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­ட­னர். வாடிக்­கை­யா­ளர்­கள் தாங்­கள் ஏமாற்­றப்­பட்­டதை உணர்ந்து புகார் அளிப்­ப­தற்கு முன்­பா­கவே காவல்­துறை நட­வ­டிக்­கை எடுத்­தி­ருந்­தது.

அம­லாக்க நட­வ­டிக்­கை­களை நேரில் பார்­வை­யிட ஊட­கங்­களும் அழைக்­கப்­பட்­டி­ருந்­தன. இத­னால் போலிஸ் கண்­டோன்­மெண்ட் வளா­கத்­தில் உள்ள மோச­டித் தடுப்­புப் பிரி­வில் நடை­பெற்ற சில விசா­ர­ணை­களை செய்­தி­யா­ளர்­கள் காண முடிந்­தது. முத­லீட்டு மோச­டி­க­ளைப் பற்றி விளக்­கிய காவல்­துறை, அதிக பணம் சம்­பா­திக்­க­லாம் என்று கூறி மோச­டிக்­கா­ரர்­கள் ஏமாற்­று­வ­தா­கக் கூறி­யது.

ஏமாற்­றப்­படும் வாடிக்­கை­யா­ளர்­கள், நிதி நிபு­ணர் என்று கூறப்­படும் நப­ரி­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ ப­டுகின்­ற­னர். அப்­போது, முத­லீடு மூலம் வெற்­றி­க­ர­மாக பணம் சம்­பா­திக்­கும் சில குறிப்­பு­களை அந்த நிபு­ணர் பகிர்ந்­து­கொள்­கி­றார்.

பெரும்­பா­லான சம்­ப­வங்­களில் பாதிக்­கப்­பட்ட வாடிக்கையாளர்­ களுக்கு ஆரம்­பத்­தில் சிறிது லாபம் கிடைக்­கிறது.

இன்­ன­மும் முத­லீடு செய்­தால் பெரும் லாபம் கிடைக்­கும் என்­றும் உட­ன­டி­யாக பணத்தை வங்­கிக் கணக்­குக்கு அனுப்பி வைக்­கும்­ ப­டி­யும் மோச­டிக்­கா­ரர்­கள் கூறு­கின்­ற­னர். பணம் கிடைத்­த­தும் அவர்­கள் மாய­மாகி விடு­கின்­ற­னர் என்று காவல்­துறை சொன்­னது.

வேலை வாய்ப்பு மோசடி சம்­ப­வங்­களில் உட­ன­டி­யாக பணம் சம்­பா­திக்­க­லாம் என்று கூறி இணை­யம் மற்­றும் சமூக ஊட­கங்­களில் விளம்­ப­ரங்­கள் வெளி­யி­டப்­ப­டு­வ­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

விலை உயர்ந்த பொருட்­கள் இணை­யம் வழி­யாக பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் வாங்க வைக்­கப்­ப­டு­கின்­ற­னர். விற்­ப­னையை அதி­க­ரிக்­கும் உத்­தி­யாக இத்­த­கைய மோசடி நடை­பெ­று­கிறது. ஆரம்­பத்­தில் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கவர்ச்­சி­ க­ர­மான லாபம் கிடைக்­கிறது. ஆனால் பெரிய தொகைக்கு பொருளை வாங்­கி­ய­தும் மோச­டிக்­கார்­க­ளின் தொடர்பு துண்­டிக்­கப் ­ப­டு­கிறது. சிங்­கப்­பூ­ரில் மோசடி சம்­ப­வங்­கள் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தாகவும் காவல்­துறை தெரி­வித்­தது. கடந்த ஆண்டு நடந்த மோச­டி­களில் 630 மில்­லி­யன் வெள்­ளிக்கு மேல் இழப்பு ஏற்­பட்­டது. இது, 2020ஆம் ஆண்­டின் 268.4 மில்­லி­யன் ெவள்ளி மோச­டி­க­ளை­விட இரண்­டரை மடங்கு அதி­கம்.