செங்காங்கில் மசெகவின் 3 புதுமுகங்கள்

செங்காங்கில் மசெகவின் 3 புதுமுகங்கள்

2 mins read
98abdfb2-4ab8-4f9f-b9a8-1cc830591f7a
செங்­காங் குழுத்­தொ­கு­தி­யில் கட்சி கிளை­க­ளுக்­குத் தலைமை ஏற்­க­விருக்­கும் மூன்று புது­முகங்­களை மக்­கள் செயல் கட்சி நேற்று அறி­மு­கப்­படுத்தியது. (இடமிருந்து) இணைப் பேராசிரியர் எல்மி நெக்மாட், தியோடோரா லாய், லிங் வெய்ஹோங், ஆகிய அந்த மூவருடன் டாக்டர் லாம் பின் மின். படம்: டாக்டர் லாம் பின் மின்/ஃபேஸ்புக் -

செங்­காங் குழுத்­தொ­கு­தி­யில் கட்சி கிளை­க­ளுக்­குத் தலைமை ஏற்­க­விருக்­கும் மூன்று புது­மு­கங்­களை மக்­கள் செயல் கட்சி அறி­மு­கப்­படுத்தி இருக்­கிறது.

அந்த மூவ­ரும் அடுத்த பொதுத் தேர்­த­லில் ஆளும்­கட்சி சார்­பில் போட்­டி­யி­டு­வார்­கள் என்­ப­தற்­கான அறி­கு­றி­கள் அதன்­ மூ­லம் தெரி­ய­வந்துள்ளது.

மசெக தலை­மை­யகச் செயற்­குழு­வின் தலை­வர் சான் சுன் சிங் நேற்று கட்சி அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டார்.

இணைப் பேரா­சி­ரி­யர் எல்மி நெக்­மாட், 40, திரு­வாட்டி தியோ­டோரா லாய், 36, திரு லிங் வெய்­ஹோங், 41, ஆகிய மூவ­ரும் கடந்த 2020ல் நடந்த பொதுத் தேர்­த­லில் இந்­தத் தொகு­தி­யில் பாட்­டா­ளிக் கட்­சியை எதிர்த்து போட்­டி­யிட்ட மசெக குழு­வில் இடம்­பெற்­றி­ருந்த மூன்று பேருக்குப் பதி­லாக பொறுப்­பேற்­பார்­கள் என்று அறிக்கை தெரி­வித்­தது.

திரு இங் சீ மெங், திரு அம்­ரின் அமின், திரு ரேமண்ட் லை ஆகி­யோர் அந்த மூவர்.

புதிய முகங்­களில் பேரா­சி­ரி­யர் எல்மி சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கலை, சமூக அறி­வியல் துறை­யின் ஆய்­வுத் துறை­ உதவித் தலை­வர். திரு­வாட்டி லாய், 'பர்­பிள்' என்ற உண­வுச் செயலி நிறு­வ­னம் ஒன்­றின் உத்­திபூர்வத் துறை தலைமை அதி­காரி. திரு லிங் தனி­யார் துறை வழக்­க­றி­ஞர்,

பேரா­சி­ரி­யர் எல்மி, செங்­காங் சென்ட்­ரல் கிளைக்குத் தலைமை வகிப்­பார். திரு­வாட்டி லாய், செங்­காங் வடக்கு கிளைக்­கும் திரு லிங், செங்­காங் கிழக்குக் கிளைக்­கும் தலை­மைத் தாங்­கு­வார்­கள்.

செங்­காங் மேற்கு மசெக கிளையின் தலை­வ­ரான டாக்­டர் லாம் பின் மின், மசெக செங்­காங் குழுத்­தொ­குதி குழு­வுக்­குத் தலைமை ஏற்­பார்.

திரு இங், திரு அம்­ரின், திரு லை ஆகிய மூவ­ரும் தொடர்ந்து புதிய குழு­விற்கு உத­வு­வார்­கள்.

செங்­காங் குழுத்­தொ­குதி மசெக குழு­விற்­கான ஆலோ­ச­க­ரா­க­வும் திரு இங் செய­லாற்­று­வார்.

பதவி வில­கும் மூன்று கட்சி கிளைத் தலை­வர்­க­ளுக்­கும் செங்­காங் குழுத்­தொ­கு­திக்கு அவர்­கள் ஆற்­றிய சேவை­க­ளுக்­கா­க­வும் தொண்­டு­க­ளுக்­கா­க­வும் கட்சி நன்றி தெரி­வித்­துக்­கொண்­டது.

வருங்­கா­லத்­தில் அவர்­கள் தொடர்ந்து உத­வு­வார்­கள் என்­றும் கட்சி எதிர்­பார்க்­கிறது என அறிக்கை குறிப்­பிட்­டது.

இத­னி­டையே, செங்­காங் குழுத்­தொ­கு­தி­யில் நேற்று வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு மளி­கைப்­பொருள்­கள் வழங்­கும் நிகழ்ச்­சி­யில் கலந்து­கொண்ட டாக்­டர் லாம் ஊட­கத்­தி­டம் பேசி­னார்.

இப்­போது அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கும் புதிய குழு, குடி­மக்­க­ளு­டன் கலந்­து­ற­வாடி அடுத்த பொதுத் தேர்­த­லுக்கு ஆயத்­தப் படுத்திக் கொள்ள போதிய கால­அ­வ­கா­சத்­தைப் பெற்றி­ருக்­கும் என்று டாக்­டர் லாம் தெரி­வித்­தார்.

செங்­காங் குழுத்­தொ­கு­தி­யின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ரயீசா கான், நாடா­ளு­மன்­றத்­தில் பொய் கூறி­ய­தாக ஒப்­புக்­கொண்டு பாட்­டா­ளிக் கட்­சி­யில் இருந்­தும் நாடா­ளு­மன்­றத்­தில் இருந்தும் சென்ற ஆண்டு வில­கி­விட்­டார்.

இது பற்றி கேட்­ட­போது இது துர­திர்ஷ்­ட­வ­ச­மான ஒரு சம்­ப­வம் என்று டாக்­டர் லாம் குறிப்­பிட்­டார்.