'சர்க்கரை அளவைக் குறைத்து, புகைபிடிப்பதைக் கைவிடுங்கள்'

'சர்க்கரை அளவைக் குறைத்து, புகைபிடிப்பதைக் கைவிடுங்கள்'

1 mins read
750f4e1b-507e-4bcc-a6f5-6973f77a27a3
அவுரா ஷாய் (இடம்), சமையல் நிபுணர் மெல் தீன் ஆகியோர் சுலபமாக ஆரோக்கிய உணவு, குளிர்பானங்களைத் தயாரிப்பதை செய்துக்காட்டினர். படம்: சுகாதார மேம்பாட்டு வாரியம் -

அடுத்த இரண்டு மாதங்­களில் ரம­லான் நோன்பு மாதத்­திற்­கும் அதன் பிறகு நோன்பு பெரு­நாள் கொண்­டாட்­டத்­திற்­கும் முஸ்­லிம்­கள் ஆயத்­த­மாகி வரும் வேளை­யில் உண­வில் சர்க்­கரை அள­வைக் குறைத்து புகைப்­பி­டிப்­ப­தைக் கை வி­டுங்­கள் என்ற இயக்­கத்தை சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் ஆரம்­பித்­துள்­ளது.

இனிப்பு குறை­வான உணவு மற்றும் குளிர்­பா­னங்­களை எடுத்துக் கொள்­ளும் வழி­களை விளக்­கும் நேரடிக் காட்­சி­க­ளு­டன் இயக்­கம் தொடங்கப்பட்டுள்ளது.

ஏப்­ரல் 2ஆம் தேதி நோன்பு மாதம் ஆரம்பிக்கிறது. அந்­தக் காலக்­கட்­டத்­தில் முயற்சி செய்ய ஆரோக்­கி­ய­மான பழச்­சாறு, 'புபுர் சோம் சோம் பாண்­டான்' டெசர்ட் செய்­யும் விதத்தை சமை­யல் நிபு­ணர் மெல் தீன் கற்­றுக்­கொ­டுத்­தார்.

ஹலால் ஆரோக்­கிய உண­வுத் திட்­டத்­தில் பங்­கேற்­கும் கடை­க­ளி­லி­ருந்து நோன்பு துறக்க ஆரோக்­கி­ய­மான உணவு மற்­றும் குளிர்­ பா­னங்­களை வாங்­கு­வோ­ருக்கு சுகா­தார மேம்­பாட்டு வாரி­யத்­தின் தொகுப்பும் வழங்­கப்­படவிருக் கிறது. இந்­தத் திட்­டத்­தில் சோல் கார்­டன், ஸ்ட­ஃப்ட், பினாங்கு கல்­சர் உள்­ளிட்ட உண­வகங்­கள் பங்­கேற்­கின்­றன.

நேற்று இயக்­கத்­தைத் தொடங்கி ­வைத்த சுகா­தார அமைச்­சின் நாடாளுமன்­றச் செய­லா­ளர் ரஹாயு மஹ்­ஸாம், நோன்பு மாதம் அர்த்­த­முள்­ளது என்று குறிப்­பிட்­டார். சுயக்­கட்­டுப்­பாட்­டு­டன் இருப்­பதை அது கற்­றுத் தரு­கிறது என்று அவர் சொன்­னார்.

இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து முக்கிய கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதால் இவ்வாண்டு நோன்பு பெருநாள் கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.

"நாம் சாப்பிடும் உணவை தேர்வு செய்வதில் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை இயக்கம் வலியுறுத்துகிறது," என்று ரஹாயு மஹ்ஸாம் குறிப்பிட்டுள்ளார்.