பராமரிப்பாளர்களுக்கு அதிக ஆதரவு வழங்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அவர்களுக்கு மானியம் அதிகரிக்கப்படவிக்கிறது.
உணவு வழங்குதல், குளிக்க வைத்தல் போன்ற அன்றாட நடவ டிக்கைகளில் உதவி தேவைப்படுவோரை பராமரிப்பவர்களின் நிதிச் சுமையை குறைப்பதற்காக மானியம் வழங்கப்படும்.
தனிநபர் குடும்ப வருமானம் 1,200 வெள்ளி கொண்டவர்களுக்கும் 13,000 வெள்ளி வரையிலான ஆண்டு மதிப்பைக் கொண்ட வீடுகளில் வருமானம் இல்லாமல் வசிப்போருக்கும் வீட்டுப் பராமரிப்பு மானியம் 200 வெள்ளியிலிருந்து 400 வெள்ளி வரை இரட்டிப்பாக்கப்படும்.
$1,200 முதல் 2,800 வெள்ளி வரையிலான தனிநபர் குடும்ப வருமானம் கொண்டவர்கள் தற்போதுள்ள 200 வெள்ளியைவிட சற்றுக் கூடுதலாக 250 வெள்ளி வரை பெறுவார்கள்.
பராமரிப்பாளர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் ேமலும் கூடுதல் உதவிகள் இடம் பெறும். பராமரிப்பாளர்களில் பெரும்பாலோர் பெண்களாக இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு அதிக ஆதரவு வழங்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட மாதர் பிரச்சினை தொடர்பான வெள்ளை அறிக்கையில் இந்த உத்தேச திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

