அறிவியல்ரீதியில் காட்டுப்பன்றி கருணைக் கொலை

அறிவியல்ரீதியில் காட்டுப்பன்றி கருணைக் கொலை

1 mins read
fff708ad-b2de-46a3-ac20-71231198e034
-

ஈசூன் ஸ்திரீட் 81ல் பொது மக்களுக்குத் தொந்தரவாக இருந்து பலரைத் தாக்கிய காட்டுப்பன்றி கருணைக் கொலை செய்யப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் தேசிய பூங்காக் கழகம் தனது செயலை நியாயப்படுத்தி இருக்கிறது.

அறிவியல் அடிப்படை யில்தான் காட்டுப்பன்றி கருணைக்கொலை செய்யப்பட்டதாக அது வலியுறுத்தியுள்ளது. சிலர், காட்டுப்பன்றி கொல்லப் பட்டதை பழிவாங்கும் நடிவடிக்கை என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களின் பாது காப்பைக் கருதி காட்டுப் பன்றியை கருணைக் கொலை செய்ய ேவண்டியிருந்தது என்று தேசிய பூங்காக் கழக வனவிலங்கு நிர்வாகப் பிரிவின் இயக்குநர் டாக்டர் ஏட்ரியன் லூ கூறினார்.