ஏப்ரல் 1ஆம் தேதி எல்லைகள் திறப்பு; கடவுச்சீட்டை தூசு தட்டி தயாராகும் சிங்கப்பூர், மலேசிய பயணிகள்

கிரு­மிப் பர­வல் கார­ண­மாக மூடப்­பட்ட சிங்­கப்­பூர், மலே­சிய எல்­லைகள் நீண்­ட­கா­லத்­திற்­குப் பிறகு திறக்­கப்­ப­டு­வ­தால் இரு நாடு­க­ளைச் சேர்ந்த பய­ணி­கள் உற்­சா­க­ம­டைந்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூர், மலே­சியவாசிகள், கட­வுச்­சீட்டை தூசு தட்டி வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளுக்கு ஆயத்­த­மாகி வரு­கின்­ற­னர்.

வரும் ஏப்­ரல் 1ஆம் அனைத்­துலக எல்­லை­கள் திறக்­கப்­படுவதாக சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் அறி­வித்து உள்ளன.

இந்த அறி­விப்பு வெளி­யா­ன­தில் இ­ருந்து உள்­ளூர் விமான நிறு­வ­னங்­களில் வெளி­நாட்­டுப் பய­ணங் ­க­ளுக்­கான முன்­ப­தி­வு­கள் நிரம்பி வரு­கின்­றன.

குறிப்­பாக ஆசிய வட்­டார பய­ணங்­க­ளுக்­கான முன் ­ப­தி­வு­கள் அதி­க­ரித்­துள்­ளன.

ஏர்­ஏ­ஷியா மலே­சி­யா­வின் தலைமை நிர்­வாகியான ரியாட் அஸ்­மட், எல்­லைத் திறப்பு அறிவிப்பு வெளியானதிலிருந்து அனைத்­துலக பயணங்க­ளுக்­கான முன்­ப­திவு இரண்டு மடங்கு அதி­க­ரித்­துள்­ளது என்று கூறி­யுள்­ளார்.

சிங்­கப்­பூர், இந்­தோ­னீ­சியா (ஜகார்த்தா, சுர­பாயா, பாலி), பிலிப்­பீன்ஸ் (மணிலா), தாய்­லாந்து (பேங்­காக், புக்­கெட்), வியட்­னாம் (ஹோ சி மின்), பங்­ளா­தேஷ் (டாக்கா) உள்­ளிட்ட இடங்­கள் பய­ணி­க­ளி­டம் பிர­ப­ல­மாக விளங்­கு­வ­தாகவும் அவர் சொன்­னார்.

சிங்­கப்­பூர் மட்­டு­மல்­லா­மல் தாய்­லாந்து, பிலிப்­பீன்ஸ், இந்­தோ­னீ­சியா, கம்­போ­டியா, வியட்­னாம் போன்ற நாடு­க­ளின் எல்­லை­களும் திறக்­கப் படு­கின்றன.

இதனால் இவ்­வாண்டு இறு­திக்­குள் உள்­நாட்டு, வெளி­நாட்­டுப் பய­ணங்­கள் 100 விழுக்­காடு அல்­லது கொவிட்-19க்கு முந்­தைய நிலையை அடைய முடியும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

இதற்­கிை­டயே ஏர்­ஏ­ஷியா மலே­சி­யப் பேச்­சா­ளர் ஒரு­வர், தேவை அதி­க­ரிக்­கும்­போது விமா­னப் பய­ணங்­களின் கட்­ட­ணம் கூடும் என்­ப­தால் முன்­கூட்­டியே பய­ணங்­க­ளைத் திட்­ட­மிட்­டு­மாறு கேட்­டுக்கொண்­டார்.

மலே­சிய ஏர்­லைன்­சி­லும் பிப்­ர­வரி மாதத்­தை­விட தற்­போது தின­சரி முன்­ப­தி­வு­கள் 70 விழுக்­காட்டு கூடி­யுள்­ளது.

இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா, பிரிட்­டன் போன்ற நாடுகளுக்குச் செல்ல பயணிகள் விரும்புவதை முன் பதிவுகள் காட்டுகின்றன.

மலிண்டோ விமான நிறு­வ­னத்­தி­லும் முன்­ப­தி­வு­கள் சூடு­பி­டித்­துள்­ளன. அதன் பொதுத் தொடர்புப் பிரி­வின் இயக்­கு­நரான ராஜா சாவ்தி அம்­ரின், 30 விழுக்­காட்­டுக்கு மேல் விமா­னப் பய­ணங்­க­ளுக்­கான பதி­வு­கள் கூடி­யி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

இதற்கிடையே சிங்கப்பூர், மலே சியா இடையிலான பொதுப்போக்கு வரத்து சேவைகள் வெள்ளிக் கிழமையிலிருந்து தொடங்கப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் நேற்று அறிவித்தார்.

ெவள்ளிக்கிழமை அன்றுதான் இரு நாட்டின் எல்லைகள் முழுமை யாக திறக்கப்படுகின்றன. அதே நாளில் பொதுப் போக்குவரத்து சேவைகளையும் தொடங்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!