செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
fa552a9a-5834-4142-85ce-5f1cb4c0e47c
-

பறவைச் சின்னத்தை கைவிட

உள்ளூர் நிறுவனம் முடிவு

சிங்­கப்­பூரின் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான வி வி டெக்­னா­லஜி, பற­வைச் சின்னத்தை (படம்) தனது வர்த்­தக முத்­தி­ரை­யாக பயன்­ப­டுத்­துவதை நிறுத்தி வைத்­துள்­ளது. அமெ­ரிக்­க­வின் பிர­பல சமூக ஊடக நிறு­வ­ன­மான 'டுவிட்­டர்' புதிய சர்ச்­சை­யைக் கிளப்­பி­ய­தைத் தொடர்ந்து அந்­நி­று­வ­னம் இம்முடிவுக்கு வந்துள்ளது.

2018ஆம் ஆண்டு டிசம்­ப­ரி­லி­ருந்து உரு­வாக்கி வரும் கைேபசி செய­லியில் முகப்­புப் பட­மாக பற­வைச் சின்­னத்­தைப் பயன்­ப­டுத்த வி வி டெக்­னா­லஜி விரும்­பி­யது.

பய­னீட்டா­ளர்­க­ளின் வாழ்க்கை பாணிக்கு ஏற்ப பொருட்­க­ளை­யும் சேவை­க­ளை­யும் வழங்­கு­வது கைபேசி செய­லியின் நோக்­க­மா­கும். வி வி டெக்­னா­லஜி, செயற்கை நுண்­ண­றிவு உள்­ளிட்ட அண்மை தொழில்­நுட்­பங்­களில் கவ­னம் செலுத்தி வரு­வ­தாக அதன் இணை­யப் பக்­கம் தெரி­விக்­கிறது. இணைய வர்த்­தக தீர்­வு­களை வழங்­கும் திட்­டங்­களில் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்கழக மாண­வர்­க­ளை­யும் அது ஈடு­ப­டுத்­தி­யுள்­ளதாக தெரிகிறது. சுற்­றுலா தொடர்­பான சேவை­களை வழங்­க­வும் சிங்­கப்­பூர் பய­ணத்துறைக் கழ­கத்­தி­ட­மி­ருந்து அது அனு­ம­தி பெற்­றுள்­ளது. வி வி டெக்­ன­லாஜி. பயன்­படுத்த விரும்­பும் நீலநிற பற­வைச் சின்­னம், டுவிட்­டர் நிறு­வ­னத்­தின் சின்­னத்தை ஒத்து இருக்­கிறது. இத­னால் இரு நிறு­வ­னங்­க­ளுக்கு இடையே வர்த்­தக முத்­தி­ரையை பதிவு செய்­வ­தில் மோதல் ஏற்பட்டது. கடந்த 2018 செப்­டம்­பர் 10ஆம் தேதி அந்­தச் சின்­னத்­தைப் பதிவு செய்ய வி வி டெக்­னா­லஜி விண்­ணப்­பித்­தி­ருந்­தது. ஆனால் தனது சின்­னத்­தைப் போல இருக்­கிறது என்று வாதிட்­டுள்ள டுவிட்­டர் நிறு­வ­னம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.

சிங்கப்பூரில் கொவிட்-19

சம்பவங்கள் குறைந்தன

சிங்கப்பூரில் கொவிட்-19 தினசரி தொற்றுச் சம்பவங்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளன. சென்ற ஞாயிற்றுக்கிழமை புதிதாக 4.848 பேருக்குத் தொற்று ஏற்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட 694 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை அன்று 6,434 பேர் தொற்றுக்கு ஆளாகினர். 731 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஞாயிறு அன்று நான்கு பேர் தொற்றுக்கு உயிரிழந்தனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

வார அடிப்படையில் கொவிட்-19 தொற்று விகிதம் ஒன்றுக்குக் குறைவாக 0.75ஆக இருப்பதாக சுகாதார அமைச்சின் தகவல் தெரிவிக்கிறது. சனிக்கிழமை அன்று இந்த விகிதம் 0.77ஆக இருந்தது.