மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு

மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு

2 mins read
5fc9feb8-9521-4a59-b5c4-dc4be945474e
-

ஜூரோங், ஈசூன் ஆகிய வட்­டா­ரங்­களில் அமைந்­தி­ருக்­கும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­களில் மழை­நீர் சேக­ரிப்­புக் கட்­ட­மைப்பு பொருத்­தப்­ப­ட­வி­ருக்­கிறது. இரண்டு வட்­டா­ரங்­க­ளை­யும் சேர்ந்த 89 புளோக்­கு­களில் 15 கட்­ட­மைப்­பு­க­ளைப் பொருத்த வீவக திட்­ட­மிட்­டுள்­ளது.

2018ஆம் ஆண்­டில் இருந்து தேவைக்­கேற்­பக் கட்­டப்­படும் புதிய குடி­யி­ருப்­பு­களில் மழை­நீர்ச் சேக­ரிப்­புக் கட்­ட­மைப்­பு­கள் பொருத்­தப்­பட்டு வரு­கின்­றன. இருப்­பி­னும், ஏற்­கெ­னவே கட்­டப்­பட்ட குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில், வீவக இத்­த­கைய சேக­ரிப்பு வச­தி­க­ளைப் பொருத்­து­வது இதுவே முதல்­முறை.

இவற்­றில் சேமிக்­கப்­படும் மழை நீரை, பொது இடங்­க­ளைக் கழு­வு­தல், தாவ­ரங்­க­ளுக்கு நீரூற்­று­தல் உள்­ளிட்­ட­வற்­றுக்­குப் பயன்­ப­டுத்­து­வது திட்­டம்.

15 கட்­ட­மைப்­பு­கள் மூலம் ஆண்­டுக்கு மொத்­தம் 17,500 கன மீட்­டர் தண்­ணீ­ரைச் சேக­ரிக்க முடி­யும். இது ஓர் ஆண்­டில் 85க்கும் அதி­க­மான நாலறை வீவக வீடு­கள் சரா­ச­ரி­யா­கப் பயன்­ப­டுத்­தும் நன்­னீ­ருக்­குச் சமம்.

தண்­ணீ­ரைப் பாது­காப்­ப­து­டன் அக்­கம்­பக்­கத்­தில் திடீர் வெள்­ளத்­தைக் குறைப்­ப­தற்­கும் மழை நீர் வீணாக வடி­கா­லில் கலக்­கும் வேகத்தை மட்­டுப்­ப­டுத்­த­வும் இது உத­வும்.

மழை­நீர்ச் சேக­ரிப்­புக் கட்­ட­மைப்­பைப் பொருத்­து­வ­தற்­கான ஏலக் குத்­த­கைக்கு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் நேற்று அழைப்பு விடுத்­துள்­ளது. மே 20ஆம் தேதி அது நிறை­வ­டை­யும்.

கட்­ட­மைப்­பு­க­ளுக்­கான கட்­டு­மா­னம் அடுத்த ஆண்டு தொடங்கி 2027ல் முடி­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஒன்­றுக்கு மேற்­பட்ட புளோக்­கு­க­ளின் வடி­கால்­கள் மூலம் மழை­நீர் குடி­யி­ருப்­புப் பேட்­டை­யின் வடி­கால் கட்­ட­மைப்­பைச் சென்று சேரும். அங்­கி­ருந்து மழை­நீர்ச் சேக­ரிப்­புக் கட்­ட­மைப்­புக்கு அனுப்­பப்­படும் தண்­ணீர் பின்­னர் தொட்­டி­யில் தடுத்­து­வைக்­கப்­படும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஒவ்­வொரு கட்­ட­மைப்­பி­லும் சேக­ரிக்­கப்­படும் மழை­நீர், 12 புளோக்­கு­க­ளின் குடி­நீர் அல்­லாத தண்­ணீர்த் தேவை­களை ஈடு­கட்ட உத­வும். மறு­ப­ய­னீடு செய்­யப்­படும் இந்த நீர் மூலம், அந்த புளோக்­கு­க­ளின் 50 விழுக்­காட்­டுத் தண்­ணீரை மிச்­சப்­ப­டுத்த முடி­யும்.

ஈசூன் அவென்யூ இரண்­டில் 201 முதல் 216 வரை­யி­லான புளோக்­கு­கள் மற்­றும் ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1ல் உள்ள 329 முதல் 341 வரை­யி­லான புளோக்­கு­கள் ஆகி­யவை இந்­தத் திட்­டத்­துக்­குத் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளன.

மேலும் 1,198 வீவக அடுக்­கு­மா­டி­க­ளி­லும் அர­சாங்­கக் கட்­ட­டங்­கள் 57லும் சூரி­ய­சக்­தித் தக­டு­கள் பொருத்­தப்­படும் என்று வீவக நேற்று அறி­வித்­தது.

செம்­ப­வாங், தெம்­ப­னிஸ், தஞ்­சோங் பகார் ஆகிய வட்­டா­ரங்­க­ளின் வீவக புளோக்­கு­கள், 40 பள்­ளி­கள், இரண்டு தீய­ணைப்பு நிலை­யங்­கள் ஆகி­ய­வை­யும் அவற்­றில் அடங்­கும்.

2027ல் ஜூரோங், ஈசூன் வட்டாரங்களின் 89 வீவக குடியிருப்புகளில் புதிய வசதி