செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3d43c8ee-7926-4d01-97a8-7c2e9b7c50b0
-

ஆஸ்திரேலிய நிவாரணம்: ஆயுதப்படை உதவி நிறைவு

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் குவீன்ஸ்­லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநி­லங்­களில் வெள்ள நிவா­ரண உத­விப் பணி­கள் நேற்று முன்­தி­னம் நிறை­வுற்­ற­தாக சிங்­கப்­பூர் ஆயு­தப் படை தெரிவித்­துள்­ளது.

பிப்­ர­வரி மாத இறு­தி­யில் அவ்­விரு மாநி­லங்­க­ளி­லும் கனத்த மழை பெய்­த­தால், பர­வ­லா­கப் பெரு­வெள்­ளம் ஏற்­பட்­டது. இதில் 20 பேர் மாண்­ட­னர்; ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வீடு­களில் இருந்து வெளி­யேற நேரிட்­டது.

பாதிக்­கப்­பட்ட வட்­டா­ரங்­களில் ஆஸ்­தி­ரே­லி­யத் தற்­காப்­புப் படை மேற்­கொண்ட நிவா­ர­ணப் பணி­க­ளுக்கு சிங்­கப்­பூர் ஆயு­தப் படை உத­விக்­க­ரம் நீட்­டி­யது. சிஎச்-47எஃப் ரக சினூக் ஹெலி­காப்­டர்­கள் இரண்டு நிவா­ரண உத­விப் பணி­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன. மார்ச் 7ஆம் தேதி முதல் அவ­ச­ர­கால உத­விப் பொருள்­க­ளை­யும், நிவா­ர­ணப் பணியாளர்களை­யும் ஏற்­றிச்­செல்ல அவை உத­வின. சிங்­கப்­பூ­ரில் இருந்­தும் நிவா­ர­ணப் பொருள்­கள் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டன.

உத­விப் பணி­யில் விமா­னி­கள், விமா­னச் சிப்­பந்­தி­கள், பொறி­யா­ளர்­கள் உள்­ளிட்ட 57 பேர் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், வெள்­ளத்­தால் வெகு­வாக சேத­ம­டைந்­துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தின் வடக்­குப் பகு­தி­களில் வலு­வான புயல்­காற்­றும், கனத்த மழை­யும் முன்­னு­ரைக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் திடீர் வெள்­ளம் ஏற்­ப­டக்­கூ­டும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

விற்றுத் தீர்ந்த 'டச் அன் கோ' அட்டைகள்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான எல்லைகள் வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து போக்குவரத்துக்கு மீண்டும் திறந்துவிடப்படவிருக்கும் நிலையில், மலேசியாவில் கட்டணம் செலுத்தும் 'டச் அன் கோ' அட்டைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

சென்ற வெள்ளிக்கிழமையே அட்டைகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக, இந்த அட்டைகளின் அதிகாரபூர்வ சில்லறை விற்பனையாளரான 'செவன்-லெவன்' தெரிவித்தது. 'ஈஸிலிங்க்-டச் அன் கோ' அட்டைகளும் இருப்பில் இல்லை. பத்து வெள்ளி மதிப்புள்ள இரண்டு விதமான அட்டைகளும் ஏப்ரல் தொடக்கத்தில் கடைகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'டச் அன் கோ' அட்டைகள் பத்து ஆண்டுகள் கழித்தே காலாவதியாகும் என்றாலும் 12 மாதங்கள் பயன்படுத்தாவிட்டால் அவை செல்லுபடியாகா.