விவாகரத்தான தம்பதியரின் பிள்ளைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள்

விவாகரத்தான தம்பதியரின் பிள்ளைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள்

2 mins read
fef4a685-9a74-4020-9357-01a13bee3f7d
-

தம்­ப­தி­யர் விவா­க­ரத்து செய்­யும்­போது முன்­வைக்­கப்­படும் குடும்ப வன்­மு­றைக் குற்­றச்­சாட்­டு­கள் கடு­மை­யா­கக் கரு­தப்­படும் என்­றும் குழந்­தை­க­ளைப் பார்ப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை நீதி­மன்­றம் முடி­வு­செய்­யும் முன்­ன­தாக இத்­த­கைய குற்­றச்­சாட்­டு­கள் கருத்­தில் கொள்­ளப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சில வழக்­கு­களில் ஆலோ­ச­க­ரைச் சந்­தித்­தல் மற்­றும் மேற்­பார்­வை­யா­ளர் முன்­னி­லை­யில் பிள்­ளை­க­ளைக் காண்­ப­தற்­கான உத்­த­ரவு போன்­ற­வை­யும் பிறப்­பிக்­கப்­படும்.

மண­மு­றிவு ஏற்­ப­டும்­போது அந்­தத் தம்­ப­தி­யின் பிள்­ளை­க­ளைப் பாது­காப்­ப­தற்­காக நடப்­பில் இருக்­கும் இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள், இனி நீதி­மன்ற விசா­ர­ணை­யில் முக்­கி­யப் பங்கு வகிக்­க­வி­ருக்­கின்­றன. விவா­க­ரத்­துச் சட்­டத்­தி­லும், விவா­க­ரத்­துக்­குப் பிறகு பிள்­ளை­க­ளைக் காண்­பது தொடர்­பான நட­வ­டிக்­கை­க­ளி­லும் அண்­மை­யில் மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில் இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மாதர் சாச­னத்­தில் செய்­யப்­பட்ட திருத்­தங்­கள் கடந்த ஜன­வரி மாதம் நாடா­ளு­மன்ற ஒப்­பு­த­லைப் பெற்­றன. அதன்­கீழ், மன­நல ஆலோ­ச­க­ரைச் சந்­தித்­தல் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. முன்­னாள் கண­வர் அல்­லது மனைவி விவா­க­ரத்­துக்­குப் பிறகு குழந்­தை­க­ளைப் பார்க்க அனு­ம­திக்­கப்­ப­டா­விட்­டால் இழப்­பீடு தர­வேண்­டும்; மோச­மான சில வழக்­கு­களில் அப­ரா­தம் அல்­லது சிறைத்­தண்­ட­னை­யும் விதிக்­கப்­ப­டக்­கூ­டும்.

தம்­ப­திக்­குப் பிள்ளை வளர்ப்பு பற்றி கற்­பித்­தல், தியா­னம், குண­ம­டை­த­லுக்­கான திட்­டம் அல்­லது குடும்ப ஆத­ர­வுத் திட்­டம் போன்­ற­வை­யும் திருத்­தங்­களில் அடங்­கும்.

பிள்­ளை­க­ளைப் பார்ப்­ப­தற்­கான உத்­த­ரவை நீதி­மன்­றம் மேலும் வலு­வான முறை­யில் பிறப்­பிக்க இந்த மாற்­றங்­கள் வகை­செய்­யும்.

குழந்­தை­கள் தொடர்­பான விவ­கா­ரங்­களில் பிள்­ளை­க­ளின் நல­னுக்கு மிகுந்த முக்­கி­யத்­து­வம் தரப்­படும் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

பெற்­றோர் தங்­க­ளுக்கு இடை­யி­லான சிக்­கல்­க­ளைச் சரி­வ­ரக் கையா­ள­வும் பிள்­ளை­களை இணைந்து வளர்க்­க­வும் உத­வும் வழி­மு­றை­களில் குடும்ப நீதி­மன்­றம் கவ­னம்­செ­லுத்­து­வதை அவர் சுட்­டி­னார்.

சில சம்­ப­வங்­களில் குழந்தை துன்­பு­றுத்­தப்­பட்­ட­தாலோ அதைப் பரா­ம­ரிக்­கும் தாய் அல்­லது தந்தை வன்­மு­றைக்கு ஆளா­ன­தைப் பார்த்தோ மிக­வும் பயந்­தி­ருக்­க­லாம்.

அவ்­வாறு துன்­பு­றுத்­திய தாய் அல்­லது தந்தை குழந்­தை­யைப் பார்க்க வரு­வதை அது மனத்­த­ள­வில் ஏற்­றுக்­கொள்­ளத் தயா­ரா­கும்­வரை நீதி­மன்­றம் அவ­ரது வரு­கை­யைத் தடை­செய்­யக்­கூ­டும்.

குடும்ப வன்முறையால் குழந்தை மிகவும் பயந்திருந்தால் விவாகரத்து ஆதரவுக்கான நிபுணத்துவ அமைப்புகளை நாடலாம் என்று கூறப்பட்டது.

வன்செயல்களில் ஈடுபடும் பெற்றோர் பிள்ளையைக் காண அனுமதித்தால் அந்தக் குழந்தையும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு என்பதை ஆய்வாளர்கள் சுட்டினர்.