இளம் மலாய், முஸ்லிம் தம்பதியர்க்கு கூடுதல் அரசாங்க உதவிகள்

இளம் மலாய், முஸ்லிம் தம்பதியர்க்கு கூடுதல் அரசாங்க உதவிகள்

1 mins read
df0c5a12-4771-4e8a-8b3e-f7d90e47e030
-

வேலை­தே­டு­வ­தி­லும் புதிய திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்­வ­தற்­கும், இளம் மலாய் மற்­றும் முஸ்­லிம் தம்­ப­தி­யர் இனி கூடு­தல் உத­வி­பெற இய­லும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வச­தி­கு­றைந்த குடும்­பங்­கள் சொந்த வீட்டை வாங்­கு­வ­தற்கு ஆத­ரவு தரும் அர­சாங்­கத் திட்­டங்­கள் வரை­ய­றுக்­கப்­ப­டு­வ­தால் இது சாத்­தி­ய­மா­கும்.

20 முதல் 25 வயது வரை­யிலான இளம் தம்­ப­தி­ய­ருக்கு மத்­திய சேம­நி­திப் பங்­க­ளிப்­பு­டன்­கூடிய நிரந்­தர வரு­மா­னம் தரும் வேலை­க­ளைப் பெறும் வாய்ப்­பு­கள் அதி­கம்; இத­னால் வீடு வாங்­க கடன்­பெ­ற­வும் அவர்­க­ளால் இய­லும் என்­பதை பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான் சுட்­டிக்­காட்­டி­னார்.

தற்­போது இந்­தப் பிரி­வைச் சேர்ந்த பல­ரும் மத்திய சேம நிதிப் பங்­க­ளிப்பு இல்­லாத வேலை­களில் இருப்­பதை அவர் குறிப்­பிட்­டார்.

வர­வு­செ­ல­வுத் திட்­டத்­துக்­குப் பிந்­தைய கலந்­து­ரை­யா­ட­லில் அவர் பேசி­னார்.

மற்ற இனத்­த­வ­ரைக் காட்­டி­லும் வீவக வாடகை வீடு­களில் குடி­யி­ருக்­கும் மலாய்க் குடும்­பத்­தி­ன­ரின் எண்­ணிக்கை அதிகரிப்பது குறித்து பங்­கேற்­பாளர்­கள் அமைச்­ச­ரி­டம் கவலை தெரி­வித்­த­னர்.

மலாய்க்­கா­ரர்­கள் பின்­தங்­கி­யி­ருப்­ப­தாக இதற்­குப் பொருள் அல்ல; வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூடு­த­லான வாடகை வீடு­க­ளைக் கட்­டு­வ­து இதற்­குக் கார­ணம் என்று அமைச்­சர் கூறினார்.