'இஆர்பி' கட்டணங்களில் மாற்றமேதும் இல்லை

'இஆர்பி' கட்டணங்களில் மாற்றமேதும் இல்லை

1 mins read
7c770c1e-789d-4afe-bebb-721cc49da41c
-

இப்­போ­தைக்கு மின்­னி­யல் சாலைக் கட்­ட­ணங்­களில் (இஆர்பி) எந்த மாற்­ற­மும் இல்லை என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

ஆயி­னும், போக்­கு­வ­ரத்து வேகங்­க­ளை­யும் நெரி­சல் நில­வரத்­தை­யும் ஆணை­யம் தொடர்ந்து கண்­கா­ணிக்­கும்.

அத்­து­டன், கொவிட்-19 பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களில் தொடர்ந்து மாற்­றங்­கள் இடம்­பெறு­வ­தால் இஆர்பி கட்­ட­ணங்­களில் ஏதே­னும் மாற்­றம் செய்ய வேண்­டுமா என்­ப­தை­யும் ஆணை­யம் மதிப்­பி­டும்.

போக்­கு­வ­ரத்து நில­வ­ரம் குறித்த ஆணை­யத்­தின் அண்­மைய மறு­ஆய்­வுக்­குப் பின் இவ்­வி­வ­ரங்­கள் வெளி­யி­டப்­பட்­டன. அடுத்த மறு­ஆய்வு எப்­போது இடம்­பெ­றும் எனத் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

முந்­திய மறு­ஆய்வு கடந்த பிப்ரவரி­ மாதம் நிறை­வுற்­றது. அப்­போது, ஆயர் ராஜா விரை­வுச்­சாலை மற்­றும் மத்­திய விரை­வுச்­சா­லை­யின் சில பகு­தி­களில் நெரி­ச­லைச் சமா­ளிக்­கும் வித­மாக சில நுழை­வாயில்­களில் இஆர்பி கட்­ட­ணம் $1 உயர்த்­தப்­பட்­டது.

இப்­போது, ஏழு இடங்­களில் மட்­டும் இஆர்பி கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. கொவிட்-19 தொற்­றுப் பர­வ­லுக்­கு­முன் தீவில் 29 இடங்­களில் அக்­கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.