அமைச்சர் வோங்: கூடுதல் உதவி பற்றி மதிப்பிட அதிக காலம் தேவை

அமைச்சர் வோங்: கூடுதல் உதவி பற்றி மதிப்பிட அதிக காலம் தேவை

1 mins read
0a317a56-e6db-47d4-b82f-d813fa419b34
-

செல­வு­க­ளைச் சமா­ளிக்க நிறு­வ­னங்­க­ளுக்­கும் தனி­ம­னி­தர்­க­ளுக்­கும் திட்­ட­மிட்­ட­தற்கு முன்­ன­தா­கவே ஆத­ரவு வழங்க வேண்­டுமா என்­பது குறித்து மதிப்­பீ­டு­கள் இடம்­பெற்று வரு­வ­தா­க­வும் கூடு­தல் உதவி தேவைப்­ப­டுமா என்­பது பற்றி ஆராய அதிக காலம் தேவை எனும் நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

நிச்­ச­ய­மற்ற உல­கச் சூழ­லுக்கு இடையே சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் அதி­க­மான நெருக்­க­டி­களை எதிர்­கொள்­வ­தால் அவற்­றுக்கு கூடு­தல் ஆத­ரவு வழங்­கப்­பட வேண்­டும் என்று கோரிக்­கை­கள் விடுக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அமைச்­சர் வோங் குறிப்­பிட்­டார்.

உக்­ரேன் நெருக்­க­டி­யை­யும் அது பொரு­ளி­ய­லில் ஏற்­ப­டுத்­தும் தாக்­கத்­தை­யும் அர­சாங்­கம் தொடர்ந்து கண்­கா­ணித்து வரு­வ­தா­கக் கூறிய அவர், நிலைமை மோச­மா­னால் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் கூடு­தல் ஆத­ரவு வழங்­கப்­படும் என்­றும் உறுதியளித்தார்.

ஸ்டாம்­ஃபர்ட் சாலை­யில் உள்ள கேப்­பிட்­டல் அரங்­கில் லியான்ஹ சாவ்­பாவ் நாளேடு நேற்று ஏற்­பாடு செய்­தி­ருந்த வர­வு­செ­ல­வுத் திட்­டம் 2022 வர்த்­த­கக் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போது அமைச்­சர் வோங் இதனைத் தெரிவித்தார்.