பாதுகாப்பான பயணத்தில் கவனம் செலுத்திய உன்னத விருதுகள்

பாதுகாப்பான பயணத்தில் கவனம் செலுத்திய உன்னத விருதுகள்

2 mins read
0674e050-0fb6-4110-ac9a-e9a92064847a
முதியோர் அதிகம் வசிக்கும் பொத்தோங் பாசிர் அவென்யூ 1ல், வாகனங்கள் மெதுவான வேகத்தில் செல்ல வகைசெய்யும் 3டி தடக் குறியீடுகளை அமைப்பதில் நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து பணியாற்றிய பொத்தோங் பாசிர் குடிமக்கள் ஆலோசனைக் குழுத் தலைவர் சுவா கியன் மெங்கிற்கு (வலது) விருது வழங்கிச் சிறப்பித்தார் ஆணையத்தின் தலைமை நிர்வாகி இங் லாங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் நிலப் போக்­கு­வ­ரத்து அமைப்­பில் தங்­க­ளது பங்­க­ளிப்­பிற்­காக 47 நிறு­வ­னங்­க­ளுக்­கும் தனி­ம­னி­தர்­க­ளுக்­கும் விருது வழங்கி, நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் சிறப்­பித்­தது.

ஈராண்­டு­க­ளுக்கு ஒரு­முறை வழங்­கப்­படும் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணைய உன்­னத விரு­து­கள் நிகழ்ச்சி சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வில் நேற்று இடம்­பெற்­றது.

இம்­முறை விருது நிகழ்ச்­சி­யில், குறிப்­பாக சாலை­களும் ரயில்­களும் பேருந்­து­களும் பய­ணி­க­ளுக்­குப் பாது­காப்­பா­ன­தாக விளங்­கச் செய்­யும் திட்­டங்­கள்­மீது கவ­னம் செலுத்­தப்­பட்­டது.

அவ்­வ­கை­யில், மூத்த குடி­மக்­கள் பாது­காப்­பாக சாலை­யைக் கடக்க உத­வி­டும் முப்­ப­ரி­மாண சாலைக் குறி­யீ­டு­களை அமைப்­ப­தில் முக்­கி­யப் பங்­காற்­றிய பொத்­தோங் பாசிர் குடி­மக்­கள் ஆலோ­ச­னைக் குழு­வின் தலை­வர் 65 வயது சுவா கியன் மெங் விருது வழங்­கிச் சிறப்­பிக்­கப்­பட்­டார்.

கடந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் பொத்­தோங் பாசிர் அவென்யூ 1ல் முப்­ப­ரி­மாண சாலைக் குறி­யீ­டு­களை அமைக்க நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­து­டன் அவர் இணைந்து பணி­யாற்­றி­னார். அப்­ப­கு­தி­யில் மூத்த குடி­மக்­கள் அதி­கம் வசிப்­ப­தால் வாகன ஓட்­டு­நர்­கள் மெது­வான வேகத்­தில் வாக­னங்­களை இயக்க அந்த முப்­ப­ரி­மாண சாலைக் குறி­யீ­டு­கள் வகை­செய்­கின்­றன.

"அந்த 3டி குறி­யீ­டு­கள் வெவ்­வேறு வடி­வத்­தி­லா­னவை; எளி­தில் கவ­னிக்­கத்­தக்­கவை. அவை வாகன ஓட்­டு­நர்­க­ளி­டம் உளப்­பூர்­வத் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தால் அவற்றை அமைக்க விரும்பி­னோம்," என்­றார் திரு சுவா.

வாகன வேக வரம்பு 40 கிலோ­மீட்­ட­ரைத் தாண்­டா­த­படி இருப்­பதை உறு­தி­செய்­யத் தாங்­கள் விரும்­பி­ய­தா­கக் கூறிய அவர், இந்த ஏற்­பாட்டை வாகன ஓட்­டு­நர்­களும் நடை­யர்­களும் வர­வேற்­றுள்­ள­தா­க­வும் சொன்­னார்.

இப்­போது நான்கு பகு­தி­களில் இத்­த­கைய 3டி தடக் குறி­யீ­டு­கள் உள்­ளன.

பொதுப் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­களும் எஸ்­எம்­ஆர்டி, டவர் டிரான்­சிட் போன்ற முக்­கி­யப் போக்­கு­வரத்து நிறு­வ­னங்­களும் தங்­க­ளது திட்­டங்­க­ளுக்­காக பாராட்­டுப் பெற்­றன.

விருது நிகழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன், குறிப்பாக நிலப் போக்கு­வ­ரத்­தின் மூலம் வெளி­யிடப்­படும் உமிழ்­வு­களைக் குறைக்­கும் சிங்­கப்­பூ­ரின் முயற்­சி­யில் தனி­யார் நிறு­வ­னங்­களும் குறிப்பிடத்தக்க வகையில் பங்­க­ளித்து வரு­வ­தாக மெச்­சி­னார்.