ஆஸ்திரேலிய நிறுவனத்தை $297 மில்லியனுக்கு வாங்கிய என்சிஎஸ்

1 mins read
9c88fbaf-8a68-45fe-b08b-718ef96751c4
-

சிங்­டெல்­லின் தொழில்­நுட்­பச் சேவை­கள் நிறு­வ­ன­மான என்­சி­எஸ், 290 மில்­லி­யன் ஆஸ்­தி­ரே­லிய டாலர் (S$297 மி.) கொடுத்து 'ஏஆர்­கியூ' எனும் ஆஸ்­தி­ரே­லிய மின்­னி­லக்­கச் சேவை­கள் நிறு­வ­னத்தை விலைக்கு வாங்­கி­யுள்­ளது. மெல்­பர்­னைத் தள­மா­கக் கொண்ட மின்­னி­லக்க ஆலோ­ச­னைக் குழு­ம­மான 'ஏஆர்­கியூ', கைப்­பே­சிச் செய­லி­கள், மேகக் கணி­னித் தொழில்­நுட்­பம், தர­வுப் பகுப்­பாய்வு ஆகி­ய­வற்­றில் நிபு­ணத்­து­வம் வாய்ந்­தது. கடந்த 15 மாதங்­களில் 'என்­சி­எஸ்', ஆஸ்­தி­ரே­லி­யா­வில் விலைக்கு வாங்­கிய நான்­கா­வது நிறு­வ­னம் இது. முன்­ன­தாக, 'தி டய­லாக் குழுமம்', 'ரைலி', 'எய்ட்டி20 சொல்­யூஷன்ஸ்' ஆகிய நிறு­வ­னங்­களை அது வாங்கியிருந்தது.