சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல்காரர் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது
தமக்கு மனநலப் பரிசோதனைகள் மேற்கொள்ள ஒரு மனநல நிபுணர்க் குழுவை அமைக்கும் வரை மரண தண்டனையை ஒத்திவைக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவையும் தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்தது.
நாகேந்திரன் கொடுத்த மேல்முறையீட்டில் எந்தவொரு அடிப்படையும் ஆதாரமும் இல்லை என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறினார்.
நாகேந்திரன் அறிவாற்றல் குறைபாடு உள்ளவர் என்பதைக் காரணம் காட்டி மரண தண்டனையை நிறுத்துமாறு அவருடைய வழக்கறிஞர் வைலட் நேட்டோ முன்னதாக வாதாடினார்.
நாகேந்திரனின் மனநலன் மோசமடைந்துவருவதற்கு நம்பகமான ஆதாரம் ஏதும் இல்லை என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஒத்திவைக்கவே தற்காலிக நடவடிக்கையாக மனு தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது என்றார் அவர்.
நாகேந்திரனின் மரண தண்டனை சென்றாண்டு நவம்பர் 10ஆம் தேதி நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது.
ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பு, அவருக்குக் கிருமித்தொற்று உறுதியானதால் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2009-ஆம் ஆண்டில் 42.72 கிராம் கலப்படமற்ற ஹெராயின் போதைப் பொருளைத் சிங்கப்பூருக்குக் கடத்தியதன் தொடர்பில் நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


