தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லாசரஸ் தீவில் ஆடவரின் சடலம்

1 mins read
1d5e1813-e52b-4377-a3bc-4be77d506e01
படங்கள்: இந்திரா ரோஸ்லான்/பேஸ்புக், ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

லாசரஸ் தீவில் சென்ற ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) அன்று காணாமல்போன ஆடவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.

43 வயதான குர்னியா ‌ஹர்டிமான் சுமார்டி என்பவரின் உடல் தீவின் கரையோறத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் தென்பகுதியில் உள்ள லாசரஸ் தீவிக்கு திரு குர்னியா தமது குடும்பத்தாருடன் சென்றிருந்ததாக அவருடைய மாற்றான்மகள் தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். கடலில் நீந்தச்சென்ற திரு குர்னியா வெகுநேரம் கழித்து கரைக்கு வரவில்லை.

"லாசரஸ் தீவுகளில் கடல்நீர் மிகவும் ஆழம். அதனால் எங்களுக்குப் பதற்றமாக இருந்தது," என அவர் சின் மின் நாளிதழிடம் கூறினார்.

இதனையடுத்து, காணாமல்போனவரைப் பற்றி சமூக ஊடகங்களில் அவருடைய குடும்பத்தினர் தகவல் அளித்தனர். இன்று நள்ளிரவு சுமார் 2.50 மணியளவில் திரு குர்னியாவின் உடல் சிங்கப்பூர்க் குடிமை தற்காப்புப் படையால் கண்டுபிடிக்கப்பட்டது.

காவல் துறை சம்வபத்தை விசாரிக்கிறது.