நாட்டு வெடிகுண்டு தயாரித்த இரண்டு இளையர்கள் மீது குற்றச்சாட்டு

நாட்டு வெடிகுண்டு தயாரித்த இரண்டு இளையர்கள் மீது குற்றச்சாட்டு

1 mins read
23eaeb38-bd30-445c-9d54-73e66920f0f2
-

வீட்டில் குழாய் வெடிகுண்டு தயாரித்த இரண்டு இளையர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. ஒருவர் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர், மற்றொருவர் முழுநேர தேசியச் சேவையாளர்.

ஆயுதம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் 19 வயதான அவ்விருவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் மீது மொத்தம் ஏழு குற்றச்சாட்டுகளும், முழுநேர தேசியச் சேவையாளருக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

2017 ஆண்டுக்கும் 2020 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த இருவரும் பல நாட்டு வெடிபொருள்களைத் தயாரித்து அவற்றை வெடிக்கவும் செய்ததாகக் கூறப்பட்டது. இவற்றை அவர்கள் தங்கள் வீடுகளிலும், வெளிபுறத்திலும் செய்ததாகத் தெரிகிறது.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர்கள் இருவரும் ஒரு குழாய் வெடிகுண்டைத் தயாரித்தனர். அதை ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்குக் கொண்டுசென்று அங்கு அதை வெடிக்கச் செய்ததாகச் கூறப்பட்டது.

குற்றங்கள் புரியும்போது அவர்களுக்கு 18 வயதுக்குக் குறைவாக இருந்ததால், அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்பட முடியாது.

ஆயுதம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.