சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நிறுவப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு கைபேசிச் செயலி ஒன்றை அக்கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. கட்சி ஆற்றும் பணி
களைப் பற்றி சிங்கப்பூர் மக்களுக்கு எடுத்துரைக்க புதிய செயலியை அது தொடங்கியுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை வெல்லும் இலக்குடன் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி செயல்பட்டு வருகிறது. அக்கட்சி வளர மும்முனை உத்திமுறையை அதன் தலைமைச் செயலாளர் ஃபிரான்சிஸ் யுவென் கோடிட்டுக் காட்டினார். நாடாளு மன்றத்தில் அக்கட்சியைச் சேர்ந்த இரண்டு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு, வீட்டுக்கு வீடு சென்று குடியிருப்பாளர்களைச் சந்திப்பது ஆகியவை அவற்றில் அடங்கும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் இவைகுறித்து திரு யுவென் பேசினார்.
கட்சி உறுப்பினர்கள் இணையம் மூலம் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
பொதுத் தேர்தல் திடீரென்று அறிவிக்கப்பட்டாலும் அதற்கு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தயாராக இருக்க வேண்டும் என்று தமது கட்சி உறுப்பினர்
களிடம் திரு யுவென் வலியுறுத்தினார்.
"இப்போது நமது கட்சிக்கு இரண்டு தொகுதியில்லா நாடாளு மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்களை நமது கட்சி கொண்டிருக்க வேண்டும்.
கடந்த பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி யில் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் குழு நூலிழையில் தோற்றது. அக்குழுவைச் சேர்ந்த திரு லியோங் மன் வாயும் திருவாட்டி ஹேசல் புவாவும் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தல் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும்.

