இணையப் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம்

இணையப் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம்

1 mins read
73c76088-53e4-497f-a206-b9bfac70bf4e
தனது வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிந்திருக்கக்கூடும் என்று ஆண்டர்சன்ஸ் ஆஃப் டென்மார்க் சந்தேகிக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆண்­டர்­சன்ஸ் ஆஃப் டென்­மார்க் பனிக்­கூழ் கடை­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டைய தரவு கசிந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று அக்­க­டை­களை நடத்­தும் ஜார்­ஜஸ் நிறு­வ­னம் சந்­தே­கப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து, அதன் இணை­யப்­பக்­கத்­தின் பாது­காப்பு அம்­சங்­களை வலுப்­ப­டுத்த அது நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது.

ஆண்­டர்­சன்ஸ் ஆஃப் டென்­மார்க்­கின் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் மோச­டிக்­கா­ரர்­கள் போலி மின்­னஞ்­சல்­களை அனுப்­பி­ய­தாக அறி­யப்­ப­டு­கிறது.

தக­வல் தொழில்­நுட்­பப் பாது­காப்பு குறித்து கிட்­டத்தட்ட 100 முழு­நேர ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிப்­பது போன்ற நட­வ­டிக்­கை­களை எடுக்க ஜார்­ஜஸ் நிறு­வ­னம் முடி­வெ­டுத்­துள்­ளது.

சந்­தே­கத்­துக்­கு­ரிய மின்­னஞ்­சல்­களை அடை­யா­ளம் காண்­பது, அவற்றை எவ்­வாறு கையாள்­வது போன்ற விவ­ரங்­கள் ஊழி­யர்

­க­ளுக்­குக் கற்­றுத்­த­ரப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இணை­யம் வழி வர்த்­த­கம் செய்­யும் அணு­கு­மு­றை­யைக் கடைப்­பி­டித்து வரும் ஜார்­ஜஸ் நிறு­வனம், கடந்த ஜன­வரி மாதம் இணை­யப் பாது­காப்பு தொடர்­பான அறி­மு­கத் திட்­டத்­தில் பங்­கெ­டுத்­தது.

அத்­திட்­டத்தை தொடர்பு, தக­வல் துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ் தொடங்­கி­வைத்­தார்.

சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு ஆணை­யத்­தின்­கீழ் இந்த இணை­ய­முத்­தி­ரைத் திட்­டம் நடத்­தப்­ப­டு­கிறது. தர­மான இணை­யப் பாது­காப்பு அணு­கு­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிக்­கும் நிறு­வ­னங்­களை இத்­திட்­டம் அடை­யா­ளம் காண்­கிறது. முக்­கிய தக­வல் உள்­கட்­ட­மைப்பு இல்­லாத நிறு­வ­னங்­

க­ளுக்கு இந்த முத்­திரை வழங்­கப்­படும். நீர், எரி­சக்தி ஆகிய துறை­க­ளைப் போல முக்­கிய தக­வல் உள்­கட்­ட­மைப்பு உள்ள அமைப்­பு­கள், இதை­விட உயர்­த­ரப் பாது­காப்­பைப் பெற்­றி­ருக்க

வேண்­டும் என்று தெரிவிக்கப் பட்டது.