நீண்டகால வளரச்சியை இலக்காகக் கொண்டு உள்ளூர் ஊழியர்
களைத் தக்கவைத்துக்கொள்ளும் திட்டத்தை சிட்டி சிங்கப்பூர் வங்கி தொடங்கியுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் சிங்கப்பூர் ஊழியர்களுடன் அடிக்கடி தொடர்புகொள்ளும்
சிறப்புத் திட்டத்தை அது அறி
முகப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு சிங்கப்பூரர் கட்டமைப்பு என்று அழைக்கப்படும் இத்திட்டம், வெளிநாடுகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஆக அண்மைய தகவலைக் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றியும் உள்ளூர் ஊழியர்கள் தெரிந்து கொள்ளலாம்.
சிட்டி சிங்கப்பூரின் 120ஆம் ஆண்டுவிழாவை ஒட்டி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வலுவான அடித்தளம் கொண்ட உள்ளூர் ஊழியர்களை அமைக்க இத்திட்டம் உதவும் என்று நம்பப்படுகிறது.
சிட்டி சிங்கப்பூர் வங்கியின் உள்ளூர் ஊழியர்களில் பலர் சிங்கப்பூர் நிதித் துறையில் தலைமைப் பதவிக்கு உயர்வதாக தெரிவிக்கப்பட்டது.
18 சந்தைகளில் உள்ள கிட்டத்தட்ட 150 சிங்கப்பூர் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள இலக்கு கொண்டிருப்பதாக சிட்டி சிங்கப்பூர் வங்கி கூறியது.
அவர்கள் நியூயார்க், லண்டன், ஹாங்காங் உட்பட பல முக்கிய நகரங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
வங்கியின் நீண்டகால வெற்றிக்கு சிங்கப்பூர் ஊழியர்களின் திறன்களையும் மேம்படுத்துவது மிகவும் முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டது.

