கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் கிருமித்தொற்றைத் தடுக்கவும் மருத்துவர் ஒருவர் 'இவர்மெக்டின்' எனும் மருந்தை நோயாளிகளுக்குக் கொடுத்து வந்ததாகவும் அதைப் பயன்படுத்த ஊக்கவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கு சிங்கப்பூர் மருத்துவ மன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தனியார் மருத்துவரான டாக்டர் யாங் இங் வெய்யின் நடத்தை குறித்து மன்றம் விசாரணை நடத்துகிறது.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்காக டாக்டர் யாங் 'இவர்மெக்டின்' மருந்தை நோயாளிகளுக்குத் தருவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று சுகாதார அமைச்சிடம் புகார் செய்யப்பட்டது.
மருத்துவச் சேவை வழங்க
டாக்டர் யாங்கிற்குக் கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதியிலிருந்து 18 மாதங்களுக்கு அல்லது விசாரணை நிறைவடையும் வரை இடைக்காலத் தடை விதிப்பது அவசியம் என்று இடைக்கால ஆணைக் குழு முடிவெடுத்தது.
பொதுமக்களின் நலனைக் காக்கவும் அவர்களைப் பாது காக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குழு கூறியது.
எதிர்காலத்தில் மருத்துவராகத் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட வேண்டுமாயின் தற்போது விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடைக்கு டாக்டர் யாங் உட்பட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

