'நாட்டின் இறையாண்மையைக் கட்டிக்காப்பது முக்கியம்'

'நாட்டின் இறையாண்மையைக் கட்டிக்காப்பது முக்கியம்'

2 mins read
1b0329d1-d474-4b41-b672-94b3daa567c4
-

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை, உக்­ரேன்-ரஷ்யா போர் போன்ற பிரச்

­சி­னை­களை விநி­யோ­கத் தடை, புவி­சார் அர­சி­யல் போட்டி, பயங்­க­ர­வா­தம், இணை­யம் மூலம் தாக்­கு தல்­கள் ஆகி­யவை ஏற்­பட்டு உல­க­ளா­விய நிலை­யில் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­த­லாம் என்று தெரி­ய­வந்­தி­ருப்­ப­தாக தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் தெரி­வித்­தார்.

இத்­த­கைய பிரச்­சி­னை­களை ஒவ்­வொரு நாடும் ஏற்­றுக்­கொள்­ளும் அனைத்­து­ல­கக் கொள்­கை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு ஆசி­யான் நாடு­கள் ஒன்­றி­ணைந்து எதிர்­கொள்­ள­லாம் என்­றார் அவர். மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் நேற்று நடை­பெற்ற புத்­ரா­ஜெயா கருத்­த­ரங்­கில் பேசி­ய­போது டாக்­டர் இங் இவ்­வாறு கூறி­னார்.

கருத்­த­ரங்­குக்கு மலே­சிய தற்­காப்­புப் பயிற்­சிக் கழ­கம் ஏற்­பாடு செய்­தது. பல்­வேறு நாடு­களின் தற்­காப்பு அமைச்­சர்­கள், அதி­கா­ரி ­கள், கல்­வி­மான்­கள் ஆகி­யோர் அதில் கலந்­து­கொண்டு தற்­காப்பு தொடர்­பான விவ­கா­ரங்­கள் பற்றி கலந்­து­ரை­யா­டி­னர். தென்­கி­ழக்­கா­சிய வட்­டா­ரத்­தில் ஆசிய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான பாது­காப்பு ஒத்­து­ழைப்­புக்­குத் தேவை­யான மூன்று அம்­சங்­களை டாக்­டர் இங் கோடிட்­டுக்­காட்­டி­னார். ஒவ்­வொரு நாட்­டின் இறை­யாண்­மையும் கட்­டிக்­காக்­கப்­பட வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார். "சர்ச்­சை­கள் ஏற்­ப­டும்­போது படை­யெ­டுப்­பு­கள் நிக­ழக்­கூ­டாது. மாறாக, அமை­தி­யான முறை­யில் தீர்வு காண வேண்­டும்," என்று அமைச்­சர் இங் கூறி­னார். ஒவ்­வொரு நாட்­டுக்­கும் அதன் நல­னுக்கு முன்­னு­ரிமை கொடுத்து முடி­வெ­டுக்­கும் உரிமை இருக்க வேண்­டும் என்று டாக்­டர் இங் கூறி­னார். நாடு­க­ளி­டையே பிரச்­சினை எழுந்­தால் அதைப் பற்றி பேசி தீர்வு காண பொது­வான தளம் ஒன்று இருக்க வேண்­டும் என்­றார் அவர்.

பாது­காப்பு தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்­கள் அதி­க­ரிக்­கப்­பட வேண்­டும் என்­றும் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான நம்­பிக்கை மற்­றும் புரிந்­து­ணர்வு அங்­கீ­க­ரிக்­கப்­படுவதை தளம் மூலம் மேம்­ப­டுத்த வேண்­டும் என்­றார் அமைச்­சர் இங்.