கடலில் மாயமானவரின் உடல் கரையோரம் ஒதுங்கியது

கடலில் மாயமானவரின் உடல் கரையோரம் ஒதுங்கியது

2 mins read
6b8a0e7d-4acd-4843-955a-c17a74134a06
-

லசா­ரஸ் தீவில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காணா­மல் போன ஆட­வ­ரின் உடல் நேற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. 43 வயது திரு குர்­னியா ஹார்­டி­யா­மான் சுமார்­டி­யின் உடல் நேற்று அதி­காலை 2.50 மணி அள­வில் கரை­யோ­ரம் ஒதுங்­கி­யது. அவ­ரது மர­ணம் குறித்து காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

லசா­ரஸ் தீவு அரு­கில் உள்ள கடற்­ப­கு­தி­யில் ஆட­வர் ஒரு­வர் மாய­மா­ன­தாக தக­வல் கிடைத்­த­தாக காவல்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­

ப­கல் 1.25 மணி அள­வில் லசா­ரஸ் தீவின் அருகே உதவி கேட்டு அழைப்பு வந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

லசா­ரஸ் தீவு கடற்­ப­கு­தி­யில் திரு குர்­னியா நீந்­திக்­கொண்­டி­ருந்­த­போது அவர் கட­லில் மூழ்­கி­ய­தாக அவ­ரது மாற்­றான்

மக­ளான 28 வயது திரு­வாட்டி யானா அசி­மான் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

"என் தாயா­ருக்கு அன்­பான கண­வ­ரா­க­வும் அவர் இருந்­தார். நாங்­கள் சிறிது காலத்­துக்கு

மட்­டுமே ஒன்­றாக வாழ்ந்­தோம். என் நல­னி­லும் அவர் அக்­கறை காட்­டி­னார்," என்று திரு­வாட்டி யானா பதி­விட்­டார்.

துப்­பு­ர­வுப் பணி­யா­ள­ரா­கப் பணி­பு­ரிந்த திரு குர்­னியா, தமது குடும்­பத்­து­டன் லசா­ரஸ் தீவுக்­குச் சென்­றி­ருந்­த­தாக திரு­வாட்டி யானா கூறி­னார்.

தீவை­விட்டு புறப்­ப­டு­வ­தற்கு முன் கடற்­க­ரைக்­குச் செல்ல விரும்புவ­தாக திரு குர்­னியா தமது குடும்­பத்­தி­ன­ரி­டம் கூறி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

நண்­ப­க­லா­கி­யும் திரு குர்­னி­யாவை இன்­னும் காண­வில்லை என்று உணர்ந்­தார் திரு­வாட்டி யானாவின் தாயார். கடல் மிக­வும் ஆழ­மாக இருந்­த­தா­க­வும் குடும்­பத்­தி­னர் அனை­வ­ரும் கவ­லை­யில் ஆழ்ந்­த­தா­க­வும் திரு­வாட்டி யானா தெரி­வித்­தார்.