புதிய கடப்பிதழுக்கு குவியும் விண்ணப்பங்கள்

புதிய கடப்பிதழுக்கு குவியும் விண்ணப்பங்கள்

1 mins read
97b68ecb-9d12-432b-b964-245e0fae631f
-

சிங்­கப்­பூ­ரில் இந்த மாதம் புதிய கடப்­பி­த­ழுக்­கான விண்­ணப்­பங்­கள் முன்­னெப்­போ­தும் இல்­லாத அளவு அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக குடி­நு­ழைவு, சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

காலா­வ­தி­யான அல்­லது விரைவில் காலா­வதி ஆக­வி­ருக்கும் கடப்­பி­தழ்­க­ளின் எண்­ணிக்கை ஒரு மில்­லி­யன் என்று அது கூறி­யது.

அன்­றா­டம் கிட்­டத்­தட்ட ஆறாயிரம் பேர் புதிய கடப்­பி­த­ழுக்கு விண்­ணப்­பிக்­கி­றார்­கள்; ஒப்­பு­நோக்க, கொவிட்-19 நோய்ப்­ப­ர­வ­லுக்கு முன்பு ஒவ்­வொரு நாளும் சரா­ச­ரி­யாக இரண்­டா­யி­ரம் பேர் விண்­ணப்­பித்­த­னர்.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு தடுப்­பூசி செலுத்­திக்­கொண்­டோ­ருக்­கான பய­ணக் கட்­ட­மைப்பு அம­லுக்கு வர­வி­ருக்­கும் வேளை­யில் சிங்­கப்­பூ­ரர்­கள் மீண்டும் வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வதை எதிர்­நோக்­கி­இருப்பதாக ஆணை­யம் குறிப்­பிட்டது.

அதி­க­மான விண்­ணப்­பங்­கள் வந்­து­சேர்­வ­தால் அவற்­றைச் சரி­பார்த்து கடப்­பி­தழ்­களை வழங்­கக் கூடு­தல் நேரம் பிடிக்­கும்; அதுகுறித்து சிங்­கப்­பூ­ரர்­க­ளின் புரிந்­து­ணர்வை வேண்­டு­கி­றோம் என்று ஆணை­யம் கூறி­யது.

அடுத்த சில மாதங்­களில் பய­ணம் செய்­யத் திட்­ட­மி­டும் சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் கடப்­பி­தழ்­க­ளைப் புதுப்­பிக்­க­வேண்டி இருந்­தால் முன்­கூட்­டியே விண்­ணப்­பிக்­கும்­படி அது கேட்­டுக்­கொண்­டது.

ஆணை­யத்­தின் இணை­யத் தளத்­தின் மூல­மும் விண்­ணப்­பங்களைச் சமர்ப்­பிக்­க­லாம். அடுத்த ஆறு மாதங்­க­ளுக்கு வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளைத் திட்­ட­மி­டாத சிங்கப்பூ­ரர்­கள் இப்­போது கடப்­பி­தழ்­க­ளைப் புதுப்­பிக்­கத் தேவை­யில்லை என்று ஆணை­யம் ஆலோசனை கூறி­யது.